தீபாவளி ஸ்பெஷல்: 20 வருஷம் கழிச்சு வரும் 'சித்தி-2'

தீபாவளி ஸ்பெஷல்: 20 வருஷம் கழிச்சு வரும் 'சித்தி-2'

பெரிய திரையில் தான் உச்சத்தில் இருக்கும்போதே, சின்னத்திரைக்குள் நுழைந்து அதில் வெற்றி முத்திரையைப் பதித்தவர் நடிகை ராதிகா.

ராதிகாவுக்கு சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்த சீரியல் சித்தி. 1999-ல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலை 90'ஸ் கிட்ஸ் யாரும் மறக்க மாட்டார்கள். இரவு 9 மணியாகி விட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டு மொத்தக் குடும்பமும் டிவி-யின் முன்பு அமர்வது வழக்கமான ஒன்றாக இருக்கும். அந்தளவுக்கு பார்வையாளர்களை தன் நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்தார் ராதிகா.

சித்தி சீரியலை தொடர்ந்து, செல்வி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து விட்டாலும், சித்தி சீரியலில் அவர் நடித்த சாராதா என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. இந்நிலையில் சித்தி சீரியல் ரசிகர்களுக்கும், 90'ஸ் கிட்ஸ்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

அது என்னவென்றால் சித்தி சீரியலில் இரண்டாம் பாகம் வரப்போகிறது! இதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன. சென்னையில் சித்தி 2-வின் படபிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், தீபாவளிக்கு இதன் ப்ரோமோவை வெளியிட முடிவு செய்திருக்கிறதாம், தயாரிப்பு நிறுவனமான ராடன். தவிர, இதில் நடிகை பானுப்ரியாவின் தங்கை நிஷாந்தி முக்கியக் கதாபாத்தில் நடிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.