ஐபிஎல் இப்போது 300 ரன்களையும் கடக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது; நாங்களும் அதை செய்ய முடியும்: ரின்கு சிங்

ஐபிஎல் இப்போது 300 ரன்களையும் கடக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது; நாங்களும் அதை செய்ய முடியும்: ரின்கு சிங்
முழு எபிசோடைக் காண இங்கே கிளிக் செய்யவும்
'ஜென் போல்ட்' நட்சத்திரமான ரின்கு சிங், JioHotstar-க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில், தனது பினிஷர் பங்கு மற்றும் உடல் நலம், அமைதி பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தார்:
"நான் பொதுவாக 5 அல்லது 6-ஆவது இடத்தில் பேட் செய்கிறேன் — யுபி மற்றும் ஐபிஎல்லும் இதையே செய்துள்ளேன், எனவே இது எனக்கு பழக்கம். 14 போட்டிகள் உள்ள ஐபிஎல்ல, உடலை நன்றாக பராமரித்து, சரியாக மீண்டெடுக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். நான் மஹி அண்ணாவுடன் அடிக்கடி பேசுவேன் — அவர் எனக்கு அமைதியாக இருந்து, போட்டியின் நிலைக்கு ஏற்ப விளையாடச் சொல்வார். அமைதியாக இருந்தால், எல்லாம் இயற்கையாக சரியாகிவிடும்."
அதோடு, பெரியோரிடமிருந்து, குறிப்பாக ஆண்ட்ரே ரசல் போன்றவரிடமிருந்து தன்னுடைய பேட்டிங் கலையை வளர்த்துக்கொள்வது பற்றியும் ரின்கு கூறினார்:
"ஐபிஎல் விளையாடத் தொடங்கியதிலிருந்து நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். ரசல் இறுதி ஓவர்களில் எப்படி ஆடுகிறார், எப்படி தனது உடலை பயன்படுத்தி சக்தி உருவாக்குகிறார் என்பதைக் கவனமாக பார்க்கிறேன். அவற்றை பார்த்து கற்றுக்கொள்கிறேன்."
ஐபிஎல் இப்போது 300 ரன்கள் அடையும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்று ரின்கு சிங் உறுதியாக கூறினார், முந்தைய பெரிய ரன் சேஸ்களை உதாரணமாகக் காட்டினார்:
"ஆம், நிச்சயம் முடியும். ஐபிஎல் இப்போது 300 ரன்கள் எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது; கடந்த வருடம் பஞ்சாப் 262 ரன்களை சேஸ் செய்தது. இந்த சீசனில் எல்லா அணிகளும் வலுவாக உள்ளன — யாரும் 300 ரன்கள் அடைய முடியும்."
இன்றிரவு 7:30 மணிக்கு நடைபெறும் 'TATA IPL ரிவெஞ்ச் வீக்' ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் மோதலை JioHotstar மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையில் காணுங்கள். மேலும் இவ்வாறான புதிய தலைமுறை TATA IPL வீரர்களின் சிறப்பு பேட்டிகளை பார்வையிட, Star Sports 1 (SD மற்றும் HD) மற்றும் JioHotstar-இல் இணைந்திருங்கள்!