விக்ரம் 58’ படத்தின் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

விக்ரம் 58’ படத்தின் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடிக்கவுள்ளதாகவும், தமிழ் சினிமாவில் இதுவொரு சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

மேலும் இந்த டுவீட்டை இயக்குனர் அஜய்ஞானமுத்துவும் ரீடுவீட் செய்துள்ளார். ‘விக்ரம் 58’ திரைப்படத்தில் அப்படி என்ன சர்ப்ரைஸ் இருக்கும் என்பதை நாளை மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

’விக்ரம் 58’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே இயக்குனர் அஜய்ஞானமுத்து அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது