'அசுரன்' படத்தின் அட்டகாசமான இரண்டாவது லுக்!

'அசுரன்' படத்தின் அட்டகாசமான இரண்டாவது லுக்!

தனுஷ் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'அசுரன்' திரைப்படத்தின் இரண்டாவது லுக் இன்று மாலை 6.02 மணிக்கு வெளியாகவிருப்பதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த லுக் வெளியாகியுள்ளது.'அசுரன்' படத்தின் முதல் லுக்கில் தனுஷ் நடுத்தர வயது கெட்டப்பில் இருந்த நிலையில் இந்த இரண்டாவது லுக்கில் இளமையான கெட்டப்பில் உள்ளார். அதேபோல் முதல் லுக்கில் பெரிய மீசையுடன் இருந்த நிலையில் இந்த லுக்கில் சின்னதாக மீசையுடன் காணப்படுகிறார். ஆனால் அதே வெறித்தனம், கண்களில் கோபம், கையில் ஆயுதம் இந்த லுக்கிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கேரக்டர்களும் வெவ்வேறா? அல்லது ஒரே கேரக்டர்களில் வயது வித்தியாசமா? என்பது படம் பார்த்தால் தான் தெரியவரும் மேலும் இந்த இரண்டாவது லுக்கில் இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என்றும், டிரைலர் மற்றும் முன்னோட்டம் விரைவில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த இரண்டாவது லுக்கில் இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என்றும், டிரைலர் மற்றும் முன்னோட்டம் விரைவில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா,  பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.