விஜய்சேதுபதியின் அடுத்தபட டைட்டில் அறிவிப்பு!

விஜய்சேதுபதியின் அடுத்தபட டைட்டில் அறிவிப்பு!
விஜய்சேதுபதியின் அடுத்தபட டைட்டில் அறிவிப்பு!

விஜய்சேதுபதியின் நடிப்பில் வெங்கடகிருஷ்ணா ரோஹித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது என்பதையும், இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் போஸ்டரும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார்.  சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் விஜய்சேதுபதியின் 33 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ என்ற திரைப்படம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது