நம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்

நம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்
நம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்
நம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்
நம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்

Directed by  :  Pandiraj

Produced by :   Kalanithi Maran

Written by    :   Pandiraj

Starring     :     Sivakarthikeyan,Aishwarya Rajesh,Anu Emmanuel

Music by  :  D. Imman

Cinematography  :  Nirav Shah

Edited by   : Ruben

Productioncompany:Sun Pictures

Release date:27 September 2019

Language:    Tamil

சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடித்துள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை.நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ்ஸான க்ளாஸ்ஸான சிவகார்த்திகேயனின் சிறந்த படம்.

பிரசவ வலியால் பெண் அழும்போது, காரை நிறுத்து... வெள்ளரிக்கா சாப்பிட்டு போலாம் என்று காமெடியாக சொல்லும் பொது ஒட்டுமொத்த ஆடியன்ஸ் மத்தியில் குபீர் சிரிப்பு. குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாட வேண்டிய படம் நம்ம வீட்டுப் பிள்ளை.தமிழ் சினிமாவில் தங்கச்சி பாசத்தை வைத்து படம் எடுப்பது என்பதை நிறைய இயக்குநர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ள உள்ள நிலையில், சரியான அளவுகோல் வைத்து அற்புதமாக செண்டிமெண்ட் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் பாண்டிராஜ்.

டி.இமான் இந்த படத்துக்கு கொடுத்த காதல் பாடல்களை விட தங்கச்சி பாசத்திற்கான பாடல் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும். கமர்சியல் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவு, தொய்வு ஏற்படாத எடிட்டிங் இவை அனைத்தும் பி & சி ஆடியன்ஸை மிகவும் ரசிக்க வைக்கும் அம்சங்கள். மாங்கனியாக வரும் அணு இம்மானுவல் சிவகார்த்திகேயனுடன் செல்போனில் பேசி அது கான்ஃபரென்ஸ் காலாக மாறும் போது ஏற்படும் நகைச்சுவை ரொம்ப ஸ்வீட்.

கிராமிய கதாபாத்திரங்களுக்கு என்றே பலரை தேர்ந்தெடுத்து, மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா என்று ஒரு பெரிய கூட்டத்தை உருவாக்கி, மனித உறவுகளின் சராசரி பிடிவாதம், கோபம், போன்ற சிக்கல்களை மிக எதார்த்தமாக கையாண்டுள்ளார்.