தனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா

தனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா
தனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா
தனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா
தனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன். இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர். கமல்ஹாசனும் மஞ்சுவாரியரை அழைத்து வாழ்த்தியதுடன் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. இதில் ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.