அப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா

அப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா
அப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா

அப்பாஸ் கல்சுரல்  - சென்னையின் புகழ் பெற்ற கலாச்சார நிகழ்வில் ஏறத்தாழ கடந்த நாற்பது வருடங்களாக, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், தமிழ் நாடகங்கள், மெல்லிசை நிகழ்ச்சிகள், ஃப்யூஷன் நிகழ்ச்சிகள் நடத்தி, கலைஞர்களை ஊக்குவிப்பதில் ஒருமுன்னோடியாக விளங்குகிறது. மேஜிக் காட்சிகள். முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பிரபல நடிகர்கள், நாடகத் தோழர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருடன் இணைந்து, 2000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் நிகழ்த்தி உள்ளோம்.

கடந்த 26-ஆண்டுகளாக “அப்பாஸ்” ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வு ஆகும். இந்த கலைவிழாவின் வழிகாட்டியான டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், மார்கழி இசைப்பருவத்தின் முடிவில் இந்த பாரம்பரியம் மிக்க  கலாச்சார நிகழ்ச்சியை நேர்த்தியாய் அறிமுகப்படுத்தியதுடன், ஒவ்வொரு புத்தாண்டின் அட்டகாச தொடக்கமாக இருக்க வழி வகுத்தார். அத்துடன் அவருடைய நிகழ்ச்சி, பொங்கல் திருவிழாவின் தினத்தில், ஆரம்பித்த ஆண்டு முதல், ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் ஓர் அற்புத இசை நிகழ்ச்சியாகும். எப்போதும் போல், இந்த 27 வது ஆண்டிலும்,  அருணா சாய்ராம்,, விசாகா ஹரி, சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, ரஞ்சனி காயத்ரி, ஓ.எஸ் அருண், அபிஷேக் ரகுராம், ராஜேஷ் வைத்தியா, பத்மவிபூஷன் விருது பெற்ற டாக்டர் கே.ஜே. யேசுதாஸ், பத்மபூஷன் விருது பெற்ற டாக்டர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கு கொள்ளும் ஓர் இசைச் சோலையாக விளங்கும்.

மேலும் இந்தக் கலை விழாவில், Y Gee மகேந்த்ரா, க்ரேசி மோஹன் முதலானோரின் நாடகமும் நிகழ உள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-11- ஆம் தேதி காமரஜார் ஹாலில் தொடங்கி, 20 ம் தேதி வரை தொடரும்.

இசை ஜாம்பவான்கள், உயர் திறனாளிகள் கலந்து கொண்டு பெருமையோடு வெளிப்படுத்தும் இந்த இனிய நிகழ்ச்சிகளை ஶ்ரீராம் ப்ராபர்டீஸ், ( முதன்மை புரவலர்), பெஸ்டன் பம்ப்ஸ் மற்றும் துணைப் புரவலர்களாக ஶ்ரீ பி ஓபுல் ரெட்டி ஞானாம்பாள் ட்ரஸ்ட், ஆவின், இந்தியன் வங்கி, எல்.ஐ.சி, எல் ஐ.சி ஹெச் எப் எல், தினமலர் ஆனந்த விகடன் ஆகியோரின் உறுதுணையோடு நடக்க இருக்கிறது.  ஊடகத்தின் செய்திப் பகிர்வு மற்றும் நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டங்கள் மூலம் இக் கலை விழா முழுமையை அடைகிறது.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று மாலை 6.30 மணியளவில் மாண்புமிகு அமைச்சர் திரு., மா போ கே. பாண்டியராஜன், தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்பொருளியல் துறை அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்கள்.

திரு. காமராஜ், ஐ.ஏ.எஸ்; எம்.டி; தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், 

திரு. முரளி மலையப்பன், எம்.டி. ஶ்ரீராம் ப்ராபர்டீஸ்

திரு ஒய்.ஜி..மகேந்திரா, மூத்த நாடகக் கலைஞர், ,

திரு , ரமணி எம்.டி., பெஸ்டன் பம்ப்ஸ் மற்றும் 

டாக்டர். தயாளன், "திருமதி லட்சுமி வலி மற்றும் நோய்த்தடுப்பு பாதுகாப்பு ஆகியோர் கலந்து கொண்டு, உரையாற்றுவார்கள்.

இவ் விழா பற்றிய முன்னோட்டத்தையும், நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் மேலான கருத்துகளையும் உங்கள் ஊடகத்தில் வெளியிட்டு, எங்களின் சிறப்பான முயற்ச்சிக்கு ஆதரவு அளிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.