பாண்டவர் அணியை ஆசிர்வதித்த கமல்ஹாசன்
நடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரை சந்திக்கும் போது புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் ஆதரவோடு தான் பாண்டவர் அணியாக செயல்படத் தொடங்கினோம். ஜூன் 23-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக கமல் சாரின் ஆசிர்வாதம் வாங்கினோம். இந்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இன்னும் 6 மாதங்களில் கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்குள் சின்ன சின்ன விஷயங்களால் எதிரணி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் அணியில் யார் என்ன பதவிக்கு என்பதை அறிவித்துவிட்டோம். கமல் சாரோட சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
நாங்கள் என்ன செய்யவில்லை என்று ராதிகா அம்மா குற்றச்சாட்டு வைத்தார்கள். அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல. அங்கிருக்கும் உண்மைகளில் நாங்கள் செய்த விஷயத்தை காட்டுனோம். தண்டனை செய்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதை தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது தான் அந்த வீடியோ. அதில் தவறில்லை.
பிரிவினை எல்லாம் கிடையாது. கலை நிகழ்ச்சி ஒட்டுமொத்த குடும்பமாக அனைத்து நடிகர்களும் ஒன்றாக சென்று, இவ்வளவு நிதி திரட்டியிருக்க மாட்டோம். ஒட்டுப் போட்டு முடித்தவுடன் அனைவரும் குடும்பமாகத் தான் பழகி வருகிறோம். ஆனால், அதில் தேர்தல் என்பது மிகவும் முக்கியம்.
ஒவ்வொருத்தருடைய நம்பிக்கை ஓட்டாக போடும் போது, எப்படி இவ்வளவு குறைவான ஓட்டில் ஜெயித்தோம் என்பது எங்களுக்கு தெரியவரும். இந்த ஓட்டு எல்லாம் ஏன் நமக்கு வரவில்லை என்று அப்போது தான் தெரியும். வரலட்சுமி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் ஒரு கருத்து உள்ளது. என்னிடம் சில விஷயங்களைக் கேட்டால், என் நண்பர்கள் மீது என்ன கோபம் என்பதை வெளிப்படையாக சொல்வேன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் நினைப்பதை சொல்வதற்கு உரிமையுள்ளது.
ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தான் தேர்தல் நடக்கிறது. அவர் சொல்படி தான் நடக்க முடியும். ஏன் வாக்களிக்கும் லிஸ்ட்டில் என் பெயரில்லை என்பது தேர்தல் எல்லாம் முடிந்து புதிய அணி வந்தவுடன் தான் ஏன் இல்லை என்பதை பார்க்க முடியும். சந்தா கட்டாமல் விட்டிருப்பார். சந்தா கட்டுவதில் கூட தவறு பண்ணியுள்ளனர் என்று சொல்கிறார்கள். இப்படிச் சொன்னால், சொல்லிக் கொண்டே போகலாம். வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை எப்போதோ அறிவித்துவிட்டோம். அப்போது எழும்பாத சர்ச்சை ஏன் இப்போது எழுப்பப்படுகிறது. அனைத்து கேள்விகளுக்குமே பத்மநாபன் ஐயா சரியாக பதிலளித்து வருகிறார்.
நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதை உறுப்பினர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மருத்துவ உதவி, கல்வி உதவி, நிதியுதவி, பென்சன் என பண்ணிட்டு இருக்கிறோம். இந்த கட்டிடம் ஏன் நிற்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு எத்தனையோ பேர் தடை போட்டார்கள். அதனால் எத்தனை நாள் பணிகள் நின்றது என்பது தெரியும்.
ஒரு விஷயம், காவல்துறையினர் ஒருவர் மீது சாதாரணமாக எஃப்.ஐ.ஆர் போடமாட்டார்கள். நீதிமன்றம் 3 மாதத்தில் தகவல் சொல்ல வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவவித்தே ஆக வேண்டும். அனைத்துமே நிரூபிக்கப்பட்டு தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.