இனி., பி.ஜே.பி யின் தமிழக கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் பெப்சி சிவா !

இனி., பி.ஜே.பி யின்  தமிழக கலை மற்றும் கலாச்சார பிரிவு  செயலாளர் பெப்சி சிவா !

தமிழக பி.ஜே.பி கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்ந்த இறை நம்பிக்கையாளர், உழைப்பாளி... என்று கருதப்படும் பெப்சி சிவா, பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தில் செயலாளர், தலைவர், என பல பொறுப்புகளில் 20 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்தவர். அதுமட்டுமல்லாது அகில இந்திய மாமன்ற தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்துளார்.

அதுமட்டுமில்லாது இப்போது வரை பெப்சி யூனியனின் வளர்ச்சியில் முக்கியமான நபராக இருக்கிறார்.

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில், உருவாகியுள்ள 'தமிழரசன் ' படத்தைத் தயாரித்துள்ளார். 

இப்படத்தில் சுரேஷ்கோபி, சோனுசூட் ஆகியோரும் நடித்துள்ளனர். பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முற்றிலும் புதுமையாக சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தி திரைத்துறையை ஆச்சரியப்படுத்தினார். அவ்விழாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பி.ஜே.பி-யின் முக்கிய விஜபிக்கள் பலரும் வந்திருந்தனர்.

இந்நிலையில் , பி.ஜே.பி கட்சியிலும் தனது நற்பணியை நன்றாக செய்து வருவதாலே இந்தப் புதிய பொறுப்பை தலைமை அவருக்கு வழங்கியிருக்கிறது. கட்சி தந்திருக்கும் இப்பொறுப்பை மிகுந்த பொறுப்போடு செயல்படுத்தும் ஆர்வத்தில் மகிழ்ச்சியோடு இருக்கிறார் பெப்சி சிவா.