நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: ராதாரவி பகிரங்க மன்னிப்பு

நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: ராதாரவி பகிரங்க மன்னிப்பு

"கொலையுதிர் காலம்" திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, நடிகை நயன் தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது " நயன்தாரவை பற்றி வராதே செய்தியே இல்லை,அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார். அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்' என்று ஆபாசமாகப் பேசினார். ராதாரவியின் பேச்சிக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் 'நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது அதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மனம் புண்பட்டிருந்தால் நான் அவர்களிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.