சட்டமன்ற தேர்தலை குறி வைக்கும் ரஜினிகாந்த்,கமல் படம்??

சட்டமன்ற தேர்தலை குறி வைக்கும்  ரஜினிகாந்த்,கமல் படம்??

ரஜினிகாந்தும் , கமல்ஹாசனும்1970 மற்றும் 80 களில் அபூர்வ ராகங்கள், ஆடு புலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத விளக்கும்,16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. தற்போது மீண்டும் புதிய படத்தில் இருவரும் இணைய தயாராகி உள்ளனர்.இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும், கமல் ஹாசன் தயாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்த படத்தைகைவிட முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தற்போது தகவல் பரவி வருகிறது. ரஜினி காந்த், சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விரைவில் முடித்து விட்டு கமல்ஹாசனின் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.ரஜினிகாந்த் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தீவிர அரசியலில் ஈடுபடும் முடிவில் இருக்கிறார்.எனவே கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.