நடிகை ரம்பாவுக்கு காபி கொடுத்து சமாதானப்படுத்தும் அவரது கணவர்

நடிகை ரம்பாவுக்கு காபி கொடுத்து சமாதானப்படுத்தும் அவரது கணவர்

3 குழந்தைகளுக்கு தாயாகிவிட்டேன் தமிழ் திரையுலகின் கவர்ச்சியான கதாநாயகிகளில் ஒருவர் ரம்பா.இவர் ஆந்திராவை சேர்ந்த இவர் உழவன் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு, கார்த்திக், விஜய் உள்பட பிரபல கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி கதாநாயகியாக பிரகாசித்தார்.கார்த்திக் ஜோடியாக நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் இவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

ரம்பாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் , கனடாவில் தொழில் அதிபராக இருக்கும் இந்திரகுமாரை திருமணம் செய்து 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளன.மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவியது. இதுப்பற்றி மனம் திறந்து பேசினார்.

எனக்கு நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வருவது உண்மை தான்.நல்லகதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் நடிப்பேன்.என்னால் பழைய மாதிரி கவர் ச்சியாக ஆடிப் பாடி நடிக்க முடியாது.மூன்று குழந்தைகளுக்கு தாயாகிவிட்டேன். எனக்கும் என் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். அப்போதெல்லாம் என் கணவர் இந்திரகுமார் காபி போட்டு எடுத்து வந்து என்னிடம் கொடுப்பார்.காபி சாப்பிட்டதும் சமாதானமாகி விடுவேன் என்றார் ரம்பா.