“ஜிப்ரான்” இசையில் பாடிக்கொடுத்த “அனிருத்”

“ஜிப்ரான்” இசையில் பாடிக்கொடுத்த “அனிருத்”

அனிருத் எந்த இசை வகைகளுக்கும் ஒரு ஒத்த குறியீடாக மாறுகிறார். இது அவர் இசையமைக்கும் வெற்றிப் பாடல்களை பற்றி மட்டுமல்ல, அவரது மாயாஜாலக் குரல், மெல்லிய நனைவில் உங்களை ஊற வைக்கும் அதே நேரத்தில், அவரது மேற்கத்திய இசை பாடல்கள் இடைவிடாமல் உங்கள் கால்களை பார்ட்டி மனநிலைக்கு கொண்டு சென்று ஆட வைக்கும். தற்போது ஜிப்ரான் இசையமைத்த “சிக்ஸர்” படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய மற்றும் புதுமையான அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார்.

இப்போது,  எனர்ஜியின் ஊற்றுக்கண் அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது. மிகவும் ஆதிக்கம் செலுத்தும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த போதிலும், அவரது பணிவான இயல்பு மற்றும் தன்னார்வத்துடன் மிகச்சரியாக பாடிக்கொடுக்க அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது.

இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், பாடலை கேட்கும் அனைவருக்கும் அற்புதமான ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன். இதை நான் செய்த வேலைக்காக சொல்லவில்லை. அனிருத் பாடியதை பார்த்த, வலுவான ஒரு கூடுதல் நம்பிக்கையுடன் சொல்கிறேன்" என்றார்.

வைபவ், பாலக் லால்வானி நடித்த “சிக்ஸர்” அடுத்தடுத்து மிகச்சிறந்த விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டுள்ளது. படத்தின் முதல் தோற்றம் ஒரு உடனடி ஆர்வத்தை உருவாக்கியது, அதை தொடர்ந்து விலா நோக சிரிக்க வைத்ததோடு, வேடிக்கையான ஒரு கதை வளாகத்திற்குள் நம்மை அழைத்து சென்றது டீசர். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘லவ் கானா’ கூடுதல் சுவையை ஊட்டியது. இப்போது அனிருத்தின் குரல் சேர்க்கப்பட்ட நிலையில், இது திரைப்படத்திற்கான ஒரு உறுதியான அம்சமாக தெரிகிறது.

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரனுடன் இணைந்து வால்மேட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் “சிக்ஸர்” படத்தை தயாரிக்கிறார்கள். சாச்சி எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோமின் (படத்தொகுப்பு), பசார் என்.கே.ராகுல் (கலை), சாம் மற்றும் ராம்குமார் (சண்டைப்பயிற்சி), ஜி.கே.பி, லோகன் மற்றும் அனு (பாடல்கள்), என்.ஜே.சத்யா மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள். 

“சிக்ஸர்” திரைப்படம் அதன் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.