அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்
அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்

இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றப் படம் அண்ணனுக்கு ஜே. இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார், ஒரு தாய் மக்கள் என்ற ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை மையப் படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம்.  தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் இடங்களில் எல்லாம்  படக்குழுவினர் களமிறங்கி, மாடு பிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்து இருக்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும் நுணுக்கங்கள், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏறு தழுவுதல் தமிழகத்தில் தொடருவதற்கான காரணிகள் என ஜல்லிக்கட்டை ஆதாரப்பூர்வமாக அணுகுகிறது இந்த ஆவணப்படம். உலகப் பார்வையாளர்களுக்காக உருவாகி வரும் இந்த ஆவணப்படத்தை, சர்வம் சிவம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் முருகா தியேட்டர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.    
ஒளிப்பதிவு மணிவண்ணன், இசை ஷங்கர், படத்தொகுப்பு சுதர்ஷன், எழுத்து- இயக்கம் ராஜ்குமார், தயாரிப்பு மதன் முத்துகுமார்.