’அரிமாபட்டி சக்திவேல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

திருச்சிக்கு பக்கத்து கிராமம் அரிமாபட்டி. அந்த கிராமத்துக்கு என்று தனி கட்டுப்பாடுகள் இருக்குது.

அந்த கிராமத்தில் இருக்கிற நாயகன் பவன், பக்கத்து கிராம பெண்ணான நாயகி மேக்னா எலனை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிறார்.

கட்டுபாடோட இருக்கிற அரிமாபட்டி கிராமம் நாயகனின் காதல் திருமணத்துக்குப் பிறகு மாறுச்சா இல்லையான்னு சொல்றது தான் படத்தோட மீதிக்கதை.

நாயகனா நடிச்ச பவன், அவர் வாழ்கையில நடந்த சம்பவத்தை சொல்றததால உணர்வுப்பூர்வமா நடிச்சிருக்கார்.

நாயகியா நடிச்ச மேக்னா எலன் கிடைச்ச வாய்ப்பை குறையில்லாம செஞ்சிருக்காங்க.

நாயகனின் தந்தையாக நடிச்சிருக்குற சார்லி, சிறந்த குணசித்திர நடிகர் என்பதை மீண்டும் நிரூபிச்சிருக்கார்.

அழகு, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ் என மற்ற வேடத்தில் நடிச்சிருக்குற எல்லோரும் படத்திற்கு பலம் சேர்க்குற விதத்தில் நடிச்சிருக்காங்க.

ஜே.பி.மேனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணிச்சிருக்கு.

மணி அமுதவன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்குது.

உண்மை சம்பவங்களுடன் அருமையான காதல் கதையை சேர்த்து நல்ல பொழுதுபோக்கு படமாக இயக்கிய இயக்குனர் ரமேஷ் கந்தசாமி பாராட்டப்பட வேண்டியவர்.