கிளாப் திரை விமர்சனம் - Chennaipatrika Tv

கிளாப் திரை விமர்சனம் -  Chennaipatrika Tv
கிளாப் திரை விமர்சனம்
கிளாப் திரை விமர்சனம் -  Chennaipatrika Tv
கிளாப் திரை விமர்சனம் -  Chennaipatrika Tv
கிளாப் திரை விமர்சனம் -  Chennaipatrika Tv

கிளாப் திரை விமர்சனம்

 

 

ஆதி, ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. 'கிளாப்' நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

தடகள வீரரான ஆதி ஒரு விபத்தில் தனது காலையும், தனது தந்தை பிரகாஷ் ராஜையும் இழக்கிறார். இதனால் தேசிய தடகள போட்டியில் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வருகிறார் ஆதி. இந்நிலையில் தனது காதலி ஆகாங்ஷா சிங்கை திருமணம் செய்து கொள்கிறார்.

 

 

இதனிடையே மதுரையில் உள்ள ஒரு பெண் விளையாட்டு வீரரைப் பற்றி அறிந்து கொள்கிறார்.தன்னால் சாதிக்க முடியாததை, அந்த பெண் சாதிக்க வேண்டும், தேசிய சாம்பியனாக நிற்க வேண்டும் என ஆதி ஆசைப்படுகிறார்.

 

அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிக்க ஒரு பயிற்சியாளர் கூட முன் வரவில்லை. இதன் பின்னணியில் நாசர் இருப்பது ஆதிக்கு தெரிய வருகிறது. நாசர் அவ்வாறு செய்ய காரணம் என்ன? இறுதியில் அந்த பெண் ஜெயித்தாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை

 

கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது ஒரு காலை இழந்து அவர் பரிதவிக்கும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார்.

 

நாயகி ஆகாங்ஷா சிங் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆதியின் தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ் படத்தின் முதல் காட்சியில் மட்டும் வருகிறார். நாசர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 

கனா, இறுதிச்சுற்று, பிகில் என விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால் கிளாப் படம் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.

 

இசை 

இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு ஓகே.

 

மொத்தத்தில் 'கிளாப்' – வழக்கமான ஸ்போர்ட்ஸ் படம்