கலர்ஸ் கிச்சன்: இவ்வார எபிசோடில் பிரபலங்கள் சுவாதி, மதுமிதா மற்றும் ஸ்ரீபிரியா பங்கேற்று சமைக்கும் சுவையான விருந்து
கலர்ஸ் கிச்சன்: இவ்வார எபிசோடில் பிரபலங்கள் சுவாதி, மதுமிதா மற்றும் ஸ்ரீபிரியா பங்கேற்று சமைக்கும் சுவையான விருந்து
~ செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்காவுடன் இணைந்து தெவிட்டாத இனிய உணவை இந்த பிரபலங்கள் சமைத்து வழங்குவதைக் காண நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய வார இறுதி நாட்களில் மதியம் 12:00 மணிக்கு தவறாமல் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்!~
சென்னை, 18 நவம்பர் 2020: புகழ்பெற்ற செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா, ஆகியோர் இணைந்து இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் கலர்ஸ் கிச்சன் எபிசோடுகளில் சுவையான, மாறுபட்ட வெவ்வேறு உணவுகளை எப்படி சமைப்பது என்ற செயல்முறை விளக்கத்தை வழங்கவிருப்பதால் கலர்ஸ் தமிழ் பார்வையாளர்கள் இந்த அற்புதமான விருந்தை சுவைக்க தயாராக இருக்கலாம். இந்த நிகழ்ச்சியின் உற்சாகத்தை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச்செல்ல சனிக்கிழமையன்று சுவாதி, ஞாயிறன்று மதுமிதா மற்றும் ஸ்ரீபிரியா ஆகிய பிரபலங்கள் பங்கேற்று செய்வதற்கு எளிமையான ஆனால், சுவையான உணவுகளை சமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கின்றனர். கேளிக்கையும், குதூகலமும் கலந்த இந்த நிகழ்வை கண்டு ரசிக்க மற்றும் உங்கள் சுவை நரம்புகளுக்கு தீனிபோட கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் நவம்பர் 21 மற்றும் 21 தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியை தவறாமல் கண்டு மகிழுங்கள்.
இந்நிகழ்ச்சியின் முதல் பிரிவான “தாமு தர்பார்” – ன் ஒரு அங்கமாக தக்காளி பச்சடி, சின்ன வெங்காயச் சட்னி மற்றும் சின்ன வெங்காய பச்சடி போன்ற எளிய, சுவையான ரெபிக்களை செஃப் தாமு சமைத்து விளக்கமளிக்கிறார். இந்நிகழ்ச்சியை இன்னும் குதூகலமாக்கும் வகையில் RJ. ஸ்ரீ ரஞ்சனி அழகாக தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியை அதிக பொழுதுபோக்கு நிறைந்ததாக ஆக்கும் வகையில் கீழ்வரும் பிரிவுகளில், அவர்களுக்குள் மறைந்திருக்கும் மாஸ்டர் செஃப்களை வெளிக்கொணர்வதற்காக கேளிக்கையான சில டாஸ்க்குகளில் இதில் பங்கேற்கும் பிரபலங்கள் ஈடுபடுகின்றனர். விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் என்ற பிரிவுகளின் கீழ் வெங்காய பாயாசம், ஈவ்னிங் இடியாப்ப மசாலா, புரோகோலி பிஸ்டாச்சியோ மற்றும் இனிப்பு புளிப்பு சிக்கன் போன்ற வேறுபட்ட, சுவையான உணவுகளை எப்படி சமைப்பதென இந்த பிரபலங்கள் செய்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்தவிருக்கின்றனர்.
ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு அற்புதமான முடிவை வழங்கும் வகையில், “சுடச்சுட சமையல்” என்ற பிரிவின் ஒரு பகுதியாக பண்ணி சௌவ் மற்றும் ஸ்டஃப்டு சப்பாத்தி முக்கோணம் என்ற இரு பிரபலமான தனது ரெசிபிக்களை செஃப் ஸ்ரேயா அட்கா வழங்குகிறார்.
வாயில் உங்களை அறியாமலேயே உமிழ்நீரை சுரக்கச் செய்யும் இந்த சுவையான உணவுகளை எப்படி சமைப்பது என்று நிபுணர்களிடமிருந்து நேரடியாக கற்றுக்கொள்வதற்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில், 2020 நவம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் எபிசோடுகளை கண்டு பயனடையுங்கள்.
கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகிற கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாசிசி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும். டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர், உயிரே போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.
வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.
ஊடக விசாரணைகளுக்கு தொடர்புகொள்க: