’டியர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’டியர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’டியர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’டியர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

மெல்லிய சத்தம் கேட்டலே தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட நாயகன் ஜி.வி.பிரகாஷ், மனிதருக்கு தூக்கம் மிக அவசியமானது என்று நினைப்பதோடு, தினமும் குறைந்தது 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும் என்ற பாலிசியோடு வாழும் அவருக்கும், தூக்கத்தில் சத்தமாக குரட்டை விடும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது.

 

திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யாவின் குரட்டையால் தூங்க முடியாமல் தவிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், அதனால் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார். இதனால், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இறுதியில் அது எங்கு போய் நின்றது என்பது தான் ‘டியர்’ படத்தின் மீதிக்கதை.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் அதிகமான படங்களில் நடித்தாலும், வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இந்த படத்தில் அவருடைய நடிப்பு பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நடனக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை இப்படி ஒரு வேடத்தில் நடித்ததற்காகவே பாராட்ட வேண்டும். நல்ல கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

 

காளி வெங்கட், நந்தினி, இளவரசு, கீதா கைலாசம், ரோகினி, தலைவாசல் விஜய் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையும் நேர்த்தி.

 

ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். திருமண பாடல் காட்சி பிரமாண்டமாக இருக்கிறது.

 

வித்தியாசமான கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன், குரட்டை என்பதை ஒரு குறையாக பார்ப்பவர்களுக்கு பாடம் எடுப்பதோடு, குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வையும் கொடுத்திருக்கிறார்.

 

காதல் படம் என்றாலும் அதை குடும்ப உறவுகளோடு சேர்த்து அமைக்கப்பட்ட ரசனை மிக்க திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி சென்று ரசிக்க வைக்கிறது..

 

குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு படத்தை கொடுத்த இயக்குநருக்கு சென்னை பத்திரிகா சார்பில் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.