இயக்குனர், நடிகர் ராஜசேகர் மரணம்
'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் செப்டம்பர்-8-2019 ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.
இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தவர்.
சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர்-8-2019 காலை உயிரிழந்தார்.
இந்த இரட்டையர் ஜோடி இயக்கிய மேலும் சில திரைப்படங்கள் - 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்'.