டைரக்டர் என்.லிங்குசாமி - கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!
டைரக்டர் என்.லிங்குசாமி - கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி ; தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வென்றவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டதுடன் இதில் வென்ற 50 ஹைக்கூ கவிதைகளும் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முதல் வருட துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும்போது, "கவிஞர் கனிமொழி கடந்த வருடம் துவங்கி வைத்த முதல் வருடத்திய ஹைக்கூ போட்டியில் வெற்றி பெற்ற ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்ட புத்தகத்தை அவரிடம் வழங்கினேன். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வருடம் நிறைவடைந்து உள்ளது என்கிற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு நன்றியையும் தெரிவித்தேன். மேலும் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால் எனது வாழ்த்துக்களையும் கனிமொழி எம்.பியிடம் தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது கவிஞர் அறிவுமதியும் உடன் இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று கூறினார்..
Johnson Pro