ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரப்பிரகாஷ் தயாரித்துள்ள படம் "ஃபிளாக்"
ஐ&ஐ மூவிஸ் சார்பில்
வை. வைரப்பிரகாஷ் தயாரித்துள்ள படம் "ஃபிளாக்"
பாலிவுட் சார்ந்த மிக்கி மக்கி ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும்
ஃபிளாக்
இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் SP. பொன் சங்கர்.
இசை- ராஜா ரவிவர்மா
படத்தொகுப்பு வரதராஜன்
இப்படத்தில்
கொட்டுக்காலி,
இட்லி கடை போன்ற படங்களில் நடித்த தீஹான் மற்றும்
தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த
பாலிவுட்டை சேர்ந்த
மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா
மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ...
இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்
தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா,
கர்நாடகா,
மும்பை,
குஜராத்,
ராஜஸ்தான்,
உத்தர பிரதேஷ்,
மத்திய பிரதேஷ்,
டெல்லி,
காஷ்மீர்
உள்ளிட்ட நகரங்களில் இப்படத்தை படமாக்கி உள்ளோம்
10 வயது சிறுவன் தீஹான் தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான், ஒரு முக்கிய சூழ்நிலையில் அவன் டெல்லிக்கு புறப்படுகிறான்..
ஆனால் அவன் வழி தெரியாமல் இந்தியா முழுக்க பயணிக்கிறான் ஒரு கட்டத்தில் தீவிரவாத கூட்டத்திலும் பயணிக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்படுகிறது, அப்போது எதிர்பாராத விதமாக காவல் துறையிடம் மாட்டிக் கொள்கிறான் அவன் ஏன் டெல்லி நோக்கி பயணித்தான் அவன் உன்மையில் தீவிரவாதிதானா
இறுதியில் என்ன நடந்தது என்பதே என்கிறார் இயக்குனர்..