’காமி’ (Gaami) பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’காமி’ (Gaami) பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’காமி’ (Gaami) பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’காமி’ (Gaami) பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’காமி’ (Gaami) பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

காசியில சுத்திக்கிட்டு இருக்குற நாயகன் விஷ்வன் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசா தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போல உணர்வு வருது. அதுமட்டுமில்லாம சில மணி நேரம் நினைவிழந்து போய் விடுகிறார். இதில் இருந்து மீள வைத்தியரை பார்க்கிறார். அவரோ இதுக்கு என் கிட்ட மருந்து கிடையாது,  ஆனா இதை குணப்படுத்த கூடிய காளான் ஒன்று இமயமலையில் இருக்குது. ஆனால், அது 36 வருடத்துக்கு ஒரு முறை வளரும். வளர்ந்த 24 மணி நேரத்தில் அழிஞ்சிடும்ன்னு சொல்றார்.

அதனால அந்த அதிசய காளானை பத்தி ஆராய்ச்சி செய்யும் டாக்டர் சாந்தினி செளத்ரியும் சேர்ந்து காளானை எடுக்க நாயகனுடன் இமயமலைக்கு போறாங்க.

இதுக்கு நடுவுல ஆபத்தில் இருக்கிற சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு சொல்வது போலவும், சிறுமி ஒருவரும் அடிக்கடி நாயகன் நினைவில் வர்றாங்க. அவங்க யார்? எதுகாக என் நினைவில் வர்றாங்கன்னு குழப்பமடையும் நாயகன், தனது இமயமலைப் பயணத்தையும் தொடர்கிறார். 

கடையில் நாயகன் காளானை எடுத்தாரா? இல்லையா?, சிறுவனும், சிறுமியும் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்களா? என்பதோடு, மூன்று கதைகளுக்கும் ஒரு ஒற்றுமையை சொல்வது தான் படத்தோட மீதிக்கதை.

நாயகனா நடிச்ச விஷ்வக் சென், நாயகியா நடிச்ச சாந்தினி செளத்ரி, சிறுமி ஹரிகா பெட்டா, சிறுமியின் அம்மாவாக நடிச்ச அபிநயா, சிறைச்சாலையில் சிக்கி தவிக்கும் சிறுவன் எல்லாரும் உணர்வுப்பூர்வமாக நடிச்சு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்காங்க.

மூன்று கதைகளில் காட்சிகளுமே படம் பாக்கிறவங்களை மெய் சிலிர்க்க வைக்குது.

படம் முழுக்க VFX காட்சிகள் இமயமலை பயணம், அதில் வர்ற ஆபத்து காட்சியோடு மிக தத்ரூபமா VFX காட்சி பனிகளை செஞ்சு அசத்தியிருக்காங்க. படத்தில் நிறைய பேக் புரொஜக்‌ஷன் காட்சிகளா இருந்தாலும், அது எதுன்னு தெரியாத அளவுக்கு சிறப்பா பணியாற்றிருக்காங்க.

விஷ்வநாத் ரெட்டி செலுமல்லுவின் ஒளிப்பதிவு, ஸ்வீக்கர் அகஸ்தியின் இசையில் பாடல்கள், நரேஷ் குமரனின் பின்னணி இசை, ராகவேந்திரா திருனின் படத்தொகுப்பு, இப்படி எல்லாரும் சேர்ந்து படத்துக்கு பெரிய பலம் சேர்க்கும் வகையில் உழைச்சிருக்காங்க.

சாகசம் நிறைந்த பயணம் தான் கதைக்களமாக இருந்தாலும், அதுக்கான திரைக்கதையை வித்யாதர் ககிடா மற்றும் பிரத்யுஷ் வத்யம் வித்தியாசமான முறையில் தொகுத்து, யூகிக்க முடியாத திருப்பங்களோடு சுவாரஸ்யமா நகர்த்தி செல்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த படம் மொழிகளை தாண்டி ரசிகர்களை கவரும் காட்சிகளா படமாக்கி இயக்கிய இயக்குனர் வித்யாதர் ககிடாவுக்கு சென்னை பத்திரிகா பாராட்டுக்கள்.