’மாண்புமிகு பறை’ பட விமர்சனம்

’மாண்புமிகு பறை’ பட விமர்சனம்

’மாண்புமிகு பறை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருவதோடு, அழிந்து வரும் பறை இசையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அந்த கலையை வளர்க்கும் முயற்சியிலும், அக்கலையின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதே சமயம், பறை இசையை மட்டும் இன்றி அந்த இசைக் கலைஞர்களையும் இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வது தான் ‘மாண்புமிகு பறை’.

நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்தாலும், பறை இசைக்கலைஞர் கதாபாத்திரத்தை கூடுதல் கவனத்தோடு கையாண்டிருக்கலாம்.

லியோ சிவகுமாரின் நண்பராக நடித்திருக்கும் ஆரியன், ஹீரோயினாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா ஆகியோர் நடிப்பில் குறை இல்லை.

கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை முடிந்தவரை செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் விதத்தில் இருந்தாலும், பறை இசையின் பலத்தை உணரக்கூடிய விதத்தில் இல்லை. பின்னணி இசை அளவு.

ஒளிப்பதிவாளர் ஆர்.கொளஞ்சி குமாரின் கேமரா கிராமத்து அழைகை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமாரின் படதொகுப்பு காட்சிகளின் வரிசைப்படி இருந்தாலும், படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கும்படி இல்லை. 

சுபா மற்றும் சுரேஷ் ராம் கதையும், அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் எஸ்.விஜய் சுகுமார், தமிழ் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றில் பறை இசை எப்படி கலந்திருக்கிறது என்பதையும், அழிந்து வரும் பறை இசையின் பெருமையையும் உலகறிய செய்ய முயற்சித்திருக்கிறார்கள். 

கதை சொல்லல் மற்றும் திரைக்கதை, காட்சியமைப்புகளில் சில குறைகள் இருந்தாலும், இவர்களுக்கு முயற்சி தமிழ் இசை கலாச்சாரத்திற்கும், ஆதிபறை இசைக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இத்தகைய புதிய முயற்சியை மேற்கொண்ட ‘மாண்புமிகு பறை’ படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.