என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்
துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது.
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர்.
தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் பேசுகையில், என் மகன் ஹிந்தி வெர்ஷனில் பணியாற்றினார், நான் தமிழில் பணியாற்றினேன். எங்கள் குடும்பத்திற்குள் இன்பம் நிறைந்த சவாலாக இருந்தது. படக்குழுவை பாராட்டியவர், நாயகன் துருவ்வின் நடிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார். சவாலான பாத்திரத்தில் துருவ் நடித்த விதம் பிரமாதம் என்று கூறினார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில், நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ் திரை துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த பொன்னான வாய்ப்பளித்த நடிகர் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் மேத்தாவுக்கு நன்றியை தெரிவித்தார்.
சில காட்சிகளை படமாக்கும்போது இரண்டு அல்லது மூன்று டேக்குகளுக்கு சென்றதற்காக துருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். துருவின் முதல் டேக் எப்போதுமே சிறப்பாக இருந்தது. ஐ லவ் யூ துருவ் ... என்று கூறினார். நடிகை பிரியா ஆனந்த் மற்றும் கதாநாயகி பனிதா ஆகிய இருவரையும் பாராட்டி கூறினார்.
இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் பச்சை தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே. ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், 'ஒரு கப் காபி வேண்டுமா?' என்று அவரே கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது.
நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், எஸ்ரா மூலம் மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி தெரிவித்தார். நான் இங்கிலிஷ் விங்லிஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதேபோல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன் என்று கூறினார். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா மிகவும் புதியாக இருக்கும் .
படத்தின் கதாநாயகி பனிதா, உதவி இயக்குநர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். இதுபோன்ற அற்புதமான வேலையைச் செய்ததற்காகவும் தனது இயக்குனர் கிரீசாயாவுக்கு நன்றி தெரிவித்தார். படத்தை தயாரிக்கும் போது நடிகர் விக்ரம் அளித்த மகத்தான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். "விக்ரம் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி" என்றார். தனது சக நடிகரான துருவைப் பற்றி பேசிய பனிதா, உங்களின் திரைப்பயணத்தின் துவக்கத்தில் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த இசை விழாவின் சிறப்பம்சமே நடிகர் துருவ் விக்ரமின் உரை தான். நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உரைகளை வழங்கினேன், ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.
இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்தார். தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒர் பாடல் பாடியதற்காக நன்றி தெரிவித்தார்.
இயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் பற்றி பேசிய துருவ், ஆரம்பத்திலிருந்தே இப்படம் திறன் வாய்ந்தோர் உள்ளங்கைகளில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டார் .
பின் தனது தந்தை, நடிகர் விக்ரம் பற்றி பேசுகையில், அப்பாவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்.
மேடையில் தனது மகனுடன் சேர்ந்து பேசுகையில் , நடிகர் விக்ரம் சிரித்தபடி, "துருவைப் போல பேச எனக்குத் தெரியாது" என்றார். தனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ தான் ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை என்று ஒப்புக்கொண்டார். இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன் என்று கூறி விக்ரம் தனது மகனை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கான அறிகுறியைக் கொடுத்தார்.
துருவ் நடிக்கலாம் என்று எண்ணினோம், ஆனால் ஒரு முக்கியமான கதை தேவை என்று விக்ரம் கூறினார். மற்றும் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தாவுக்கு துருவைத் தேர்ந்தெடுத்ததற்கும் அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி தெரிவித்தார். துருவின் டப்ஸ்மாஷைக் கண்டார், இந்த பாத்திரத்தில் நடிக்க துருவைப் பெற என்னை அணுகினார்.
இயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை.
ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். இன்று, அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பிகளில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்.
கதாநாயகிகள் பனிதா மற்றும் பிரியாவுக்கும் நடிகர் நன்றி தெரிவித்தார்.அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம், "நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே மரபு என் ரசிகர்கள் தான். அந்த காதல் தானாகவே வருகிறது."
தனது படத்திலிருந்து எந்த உரையாடலையும் துருவ்வால் நினைவு கூர்ந்து வழங்க முடியும் என்று கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரசிகர்களின் மகிழ்ச்சியைப் பெற்றது.
I am nothing without my dad: Dhruv Vikram
The audio of actor Dhruv Vikram's much awaited romantic action drama Adithya Varma was launched amidst much fanfare at the Sathyam Cinemas today.
The film, which is the Tamil remake of the Telugu blockbuster Arjun Reddy, marks the acting debut of Dhruv Vikram, the son of one of Tamil industry's most dearly loved heroes, Chiyaan Vikram. Directed by Gireesaya, the film also features Banita, Priya Anand and Anbu Dasan among others.
A host of celebrities attended the audio launch as did the cast and the crew of the film.
Speaking at the audio launch, the producer of the film, Mukesh Mehta said, "Vikram never behaved like a star during the making of Adithya Varma. He was only present as Dhruv's father. You will get to see Dhruv and Chiyaan Vikram act together in a film in 2021 and you can rest assured that it will be a big hit."
One of India's top cinematographers, Ravi K Chandran, who is the cinematographer of the film said, "My son has done the cinematography of this film in Hindi and I have done it for the Tamil version. That by itself is a challenge and that comes from within the family." The cinematographer was all praise for the unit and in particular, for Dhruv, who he said had done a fantastic job in this challenging role.
Gireesaaya, who is making his debut as a director through Adithya Varma, said, "I have worked as an assistant director to many directors but I have got my first break in Tamil." Expressing his gratitude to the Tamil film industry and to the langugage, the director said he needed to thank actor Vikram and producer Mehta immensely for the opportunity. Talking about his hero Dhruv. Gireesaaya said, "Dhruv is ultimate. His commitment and dedication are extraordinary. After all, he is like his father. Like father, like son."
The director said he needed to apologize to Dhruv for having gone for two or three takes while shooting some scenes. "I am apologising because although I have sometimes gone for two or three takes, I have always used only the first take. Dhruv's first take has always been brilliant. I Love you Dhruv!," the director said. He also had words of praise for both actress Priya Anand and heroine Banita, who he said had done a brilliant job.
Speaking at the audio launch, music director Radhan clarified that he was a proper Tamilian. "As my name is different, people think I am a Telugu boy."
A visibly moved Redhan said that the reason he was on the stage today was because of actor Vikram. " Nobody can beat Vikram sir when it comes to respecting and encouraging technicians. One night, my sound recordist and I were working late. Suddenly, a soft voice from behind said,'Want a cup of coffee?' He made it for us," said the young music director, who expressed his gratitude to the actor for having given him the opportunity and for encouraging him. He also thanked his sound recordist Mujeeb Rahman, Sandy, Harsha, all his singers and lyricists.
Actress Priya Anand, who spoke on the occasion, thanked producer Mukesh for having launched her in Malayalam through Ezra.
"When I worked with Sridevi ma'am in English Vinglish, I found her to be a wonderful mom. Similarly, while working in Adithya Varma, I found Vikram sir to be a wonderful and caring dad," the actress said and added that the relationship between actor Vikram and his son Dhruv was special. She pointed out that Dhruv was fun to work with and that Adithya Varma will be very fresh and engaging.
The heroine of the film, Banita, began her speech by thanking the Assistant directors team, which she termed "incredible". She also thanked her director Gireesaaya for pushing all the actors and for doing such a wonderful job. Banita too expressed her gratitude to actor Vikram for his immense support during the making of the film. Stating that she was inspired by actor Vikram, the actress said, "I am so indebted to you Vikram sir. Thank you for working so tirelessly everyday to make me and Dhruv look good." Speaking about her co-star Dhruv, Banita said, " I am so proud of you Dhruv. I am so honoured to be at the start of an incredible journey with you."
The highlight of the audio launch was actor Dhruv Vikram's speech. The young actor, began his speech saying, "I have been to several schools and colleges to deliver speeches but that was easy. However, today is different because my family is here."
Expressing gratitude to his family members for their immense support, he said, "It is because of my family that I am here today. If it were not for their support and motivation, I wouldn't be here."
The actor also disclosed that there was a team that had been consistently and dedicatedly working on this film for two years and thanked them. The dashing actor thanked his producer Mukesh Mehta for backing him and his music director Radhan for making him sing a song.
Talking about director Gireesaaya and co-director Shaurya, Dhruv said that he knew that the film was in the best hands right from the start.
The young actor next spoke about his dad, actor Vikram.
"I have no words for Appa. His dedication for this film was 100 per cent. I know that my dad is a good actor but more than that he is a great father. I am nothing without him. What you see in me is basically another facet of his." Thanking his fans for all their love, the actor said that he was nothing without them.
Dhruv said that he was here because of his mom and dad. "I wished to honour my dad and that is why I am here on this stage," he said.
Joining his son on stage, an immensely happy actor Vikram laughingly said, "I don't know to talk like Dhruv."
The actor confessed that he had never felt tension, even while awaiting his 12th standard results or waiting for Sethu's release. "However, today I am tense. Not just today but for some time now, I am tense," Vikram said, giving an indication of how much he loved and cared for his son.
"You can launch Dhruv however you want but you need an important story," Vikram said and thanked producer Mukesh Mehta for picking Dhruv and for having faith in him. "Mukesh Mehta sir had bought the rights of the film because he saw the powerful story in it. He saw a dubsmash of Dhruv and approached me to get Dhruv to play this role. This was a wonderful launch pad."
Vikram said that they had done Adithya Varma with a vision and a lot of love and it was a wonderful experience.
Complementing director Gireesaaya and co-director Shaurya, Vikram said, "They were particular that the authenticity of the film was ensured. They were very clear about what they wanted. Both Shaurya and Giri are like twins. Without Giri or Shaurya, this film couldn't have been possible. I am also like an assistant director in this film."
Actor Vikram also thanked cinematographer Ravi K Chandran and recalled that they used to share a room at one point in time. "Today, he is one of India's best DOPs. We are here because of our dream. That is what I told Dhruv as well. Follow your dreams."
The actor also thanked heroines Banita and Priya. Thanking his fans for all their love, actor Vikram said, "The only legacy that I am giving to my son is you my fans. You feel the same that my friends and famiily feel for Dhruv. That love comes automatically."
Vikram said Dhruv could recall and deliver any dialogue from his film and that he would do entire scenes. He also got Dhruv to deliver some lines from a scene in the film, much to the delight of the scores of fans who were present on the occasion.