ஜாக்பாட் - விமர்சனம்

ஜாக்பாட் - விமர்சனம்

ஜோதிகாவும் ரேவதியும் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள், இவர்கள் போலீசிடம் சிக்காமல் சாதூரியமாக இருந்து வருகின்றனர், இந்நிலையில் திரையரங்கில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக  இவர்கள் போலீசிடம் மாட்டிக்கொண்டு சிறை செல்கிறார்கள். 

சிறையில் சச்சுவை சந்திக்கும் இவர்களுக்கு, சச்சு மூலம் ஜாக்பாட் தொடர்பான துப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. 

அந்த ஜாக்பாட் என்ன? அந்த ஜாக்பாட் ஏதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும்? ஜோதிகா, ரேவதி இருவரும் ஜாக்பாட்டை எடுத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

ஆக்‌ஷன் ஹீரோயினாக ஜோதிகா படம் முழுவதும் வளம் வந்துள்ளார், ரேவதி தனது திறமையான நடிப்பின் மூலம் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்துள்ளார், நடிகர் ஆனந்த் ராஜ் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். 

யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், கோலமாவு கோகிலா பட புகழ் டோனி, மனோபாலா, தங்கதுரை என படத்தில் ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளது. 

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண், இந்த படத்தையும் எடுத்துள்ளார், காமெடி படத்தில் சமூகத்திற்கு தேவையான மெசேஜும் கொடுத்துள்ளார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மொத்தத்தில் ஜாக்பாட், காமெடி திருவிழா....