கயிறு திரை விமர்சனம்

கயிறு திரை விமர்சனம்

நடிகர்    எஸ்.ஆர்.குணா
நடிகை    காவ்யா மாதவ்
இயக்குனர்    ஐ கணேஷ்
இசை    பிரித்வி
ஓளிப்பதிவு    ஜெயன் ஆர் உன்னிதன்

கிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். ஒரு பிரச்சனை காரணமாக சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு செல்கிறார் செல்லும் இடத்தில், அங்கு பூ வியாபாரம் செய்து வரும் காவ்யா மாதவ் நாயகன் மீது காதல் வயப்படுகிறார். இவர்களின் காதலுக்கு நாயகியின் தாயார் எதிர்க்கிறார். 

அந்த சமயம் குணாவின் மாடு காணாமல் போய்விடுகிறது அதை தேடி அலைகிறார் குணா.கண்டுபிடித்தாரா இல்லையா? தாயார் ஒத்துக்கொள்கிறாரா என்பதே படத்தின் மீதிக்கதை.அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார் குணா. 

இயக்குனர் ஐ.கணேஷ் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.ஹலோ கந்தசாமி இயல்பாக நடித்திருக்கிறார். நடிகைக்கு பாந்தமாக கிராமத்து பெண் வேடம்  பொருந்துகிறது பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் பிரித்வி.கிராமத்து அழகை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.