நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டெலிசியஸ் சமையல்” புதிய சமையல் நிகழ்ச்சி

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டெலிசியஸ் சமையல்” புதிய சமையல் நிகழ்ச்சி

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 12:30 ஒளிப்பரப்பாகும் புதிய சமையல் நிகழ்ச்சி “டெலிசியஸ் சமையல்” (Delicious Samayal ).

கொரோனா லாக்டவுனில், வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் மக்களுக்கு ஆறுதலாய்  இருப்பது, மனதிற்கு பிடித்த உணவை சமைத்து உண்பது. அவ்வாறு  நீங்கள் சமைத்து உண்ண, சமைப்பதற்கு எளிமையாகவும் பார்க்கும் போதே நாவூற செய்திடும் வகையில் விதவிதமான வித்தியாசமான சுவையான உணவுகளை உங்களுக்கு சமைக்க சொல்லித் தருகிறார் சமையற் கலையில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கங்களை வென்ற இளம் சமையற் கலை நிபுணர் திரு. யஷ்வந்த் உமா ஷங்கர். இந்நிகழ்ச்சியை பா.கார்த்தி கேசவன் தயாரித்து வழக்குகிறார். உங்கள் நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 12:30 ஒளிப்பரப்பாகிறது.