’பெருசு’ திரைப்பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பெருசு’ திரைப்பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’பெருசு’ திரைப்பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பெருசு’ திரைப்பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

ஊரில் மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு என்பவரின் மகன்கள் சுனில் மற்றும் வைபவ். ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து டிவி பார்க்கும் பெருசு திடீரென்று இறந்து விடுகிறார். ஆனால், அவரது உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் திணறும் குடும்பத்தார், எப்படி பிரச்சனையை சமாளித்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதே ’பெருசு’.


எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கும் வைபவ், இயல்பான காமெடி மூலம் தனது கதாபாத்திரத்தை கையாண்டிருந்தாலும், சில இடங்களில் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்.

 

வீட்டின் மூத்த பிள்ளை கதாபாத்திரத்திரல், பல பொறுப்புகளை கவனிக்கும் சுனில், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், வைபவின் மனைவியாக நடித்திருக்கும் நிஹாரிகா, மேடை நாடக கலைஞர் போல் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்.

 

பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோரது கூட்டணி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் வரும் காட்சிகள் வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்கும்படி பார்வையாளர்களுக்கு அழுத்தும் கொடுக்கிறது.


தனம், தீபா, கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் தலைகாட்டிச் செல்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் அருண் ராஜின் இசை பாடல்களில் சோபிக்கவில்லை என்றாலும், பின்னணி இசை மூலம் நகைச்சுவை உணர்வை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

 

ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், தனது வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை உயிரோட்டத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.

 

பாலாஜியின் வசனங்கள் கிரேஸி மோகனை நினைவுப்படுத்தினாலும், சில இடங்களில் சிரிப்பே வராத வசனங்களை நகைச்சுவை என்று திணிக்கவும் செய்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் இளங்கோ ராம், முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை எந்த ஒரு நெருடல் நெருட இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கடி என்ற ரீதியில் படம் பயணித்தாலும், பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.