புதியதலைமுறையில் "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பூபேஷ்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அனைவரின் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு. தமிழக மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக உணவு விளங்கிறது. உணவையும் அதன் செய்முறைகளையும் காட்சிப்படுத்துவதோடு  அந்தந்த பகுதிசார்ந்த வரலாற்றுத் தடங்களையும் பார்வையாளர்களுக்கு உணவோடு தொட்டுக்கொடுப்பதே இந்த இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஆகும்.

வட்டாரம் சார்ந்த உணவுவகைகளையும், அந்த உணவுக்கு தேவையான, தானியங்கள், சேர்மானங்கள் ஆகியன எங்கிருந்து எந்த காலகட்டத்தில் வந்தன என்பதனையும்  ஆய்வின் மூலம் அறியப்பட்டு நிகழ்ச்சியின் ஊடாக தொகுப்பாளர் வழங்குகிறார்.  அனைவரின் பாராட்டப்பெற்ற இந்த நிகழ்ச்சி  காலத்திற்கு தக்கவாறு மாறிவரும் உணவுப்பழக்கங்களை கருத்தில் கொண்டு  இரண்டாம் பாகமாக நமது புதியதலைமுறையில் சனிக்கிழமை காலை 11:30 மணிக்கும் மறுஒளிபரப்பு ஞாயிறு 12:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பூபேஷ் .