RAMBO: LAST BLOOD செப்டம்பர் 20-ல் வெளியீடு

RAMBO: LAST BLOOD செப்டம்பர் 20-ல் வெளியீடு

RAMBO: LAST BLOOD ஆங்கிலம்  மற்றும் தமிழிலும் வெளியீடு -September 20th 

1972 ஆம் ஆண்டு John Morrel என்பவர் எழுதிய நாவலான First Blood ஐ தழுவி 1982 ஆம் ஆண்டு  அதே பெயரில் First Blood படம் வெளிவந்தது.  கடுமையான வியட்நாம் போரில் பங்குகொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் John Rambo என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு. 

வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை  பெற்ற அந்த படத்தை தொடர்ந்து மேலும் மூன்று படங்கள் வெளியாகின. அவை -முறையே -Rambo :First Blood Part 2 (1985 ), Rambo 3 (1988 ) மற்றும் Rambo (2008 ) ஆகியன அனைத்து படங்களுமே வசூலில் சாதனை புரிந்தன என்கிறபோதிலும் இரண்டாவது தொடர் படம் மட்டுமே  300  மில்லியன்  அமெரிக்க டாலர்களை வசூலித்து பெரிய சாதனையை உருவாக்கியது!

இதுவரை வெளிவந்த 4 தொடர் படங்களின் மொத்த வசூல் 727 மில்லியன் அமெரிக்க டாலர்கள்! 

இவை தவிர, தொலைக்காட்சி தொடர்கள், காமிக் புத்தகங்கள், நாவல்கள், வீடியோ கேம்ஸ் என பல ரூபங்களிலும் Rambo உலா வந்தார் என்பது சரித்திரம்!

எல்லா படங்களிலுமே Sylvester Stallone தான் John Rambo வாக தோன்றி நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
ஐந்தாம் பாகமான இந்த படத்திலும் Sylvester Stallone தான் John Rambo என்கிற முன்னாள் ராணுவ அதிகாரியாக தோன்றி நடித்துள்ளார்.

வயது 70 தை தாண்டிய போதிலும் உடல் வலிமையில் ஆகட்டும், சண்டை திறனில் ஆகட்டும் விரைவு நகர்வுகளில் ஆகட்டும் -சற்று கூட தளர்ச்சியோ தயக்கமோ இன்றி முதல் Rambo படத்தில் இருந்த அதே தெம்புடனும் சுறுசுறுப்புடனும் இப்படத்திலும் நடித்துள்ளார் என்றால் அது மிகையில்லை!

Mexico வை சேர்ந்த ஒரு களவாணி கும்பல், John Rambo வின் நண்பரின் மகளை சில காரணங்கள் கருதி கடத்தி சென்று விடுகிறது.

விடுவாரா John?

Gabrielle என்கிற அந்த பெண்ணை காப்பாற்ற Mexico விற்கு பயணிக்கிறார் Rambo. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல வயதானால் என்ன வீரமும் விவேகமும் குறைந்து விடுமா என்ன ?

ரத்தம் சிந்தினாலும் உயிரே போனாலும் கையில் எடுத்துக்கொண்ட பணியை வெற்றிகரமாக முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடனும் வைராகியத்துடனும் புயலென புறப்படுகிறார் Rambo! 

அவருடன் போராடி தோற்போர் உண்டே ஒழிய சரிக்கு சமமாக போர்  தொடுப்போர் யாரேனும் உண்டோ?

அதிரடி action காட்சிகளும் உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்த பொழுது போக்கு சித்திரமிது! 

இயக்கம் - Adrian Grunberg 
இசை - - Brian Tyler 
ஒளிப்பதிவு -Brendan Galvin
தயாரிப்பு- P V R Pictures