ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'- அன்பு மட்டும் அண்டம் தேடும்!

ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'- அன்பு மட்டும் அண்டம் தேடும்!
ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'- அன்பு மட்டும் அண்டம் தேடும்!

ஆழமான உணர்வு மற்றும் கவிதைத்துவமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் அப்பா- மகள் இடையிலான அன்பைக் காட்டும் படமாக உருவாகி வருகிறது ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸின் 'மெல்லிசை'. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய விருது பெற்ற 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாக பேசுகிறது 'மெல்லிசை'.  'வடசென்னை', 'விடுதலை' ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற நடிகர் கிஷோர் குமார் 'மெல்லிசை' படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'பரியேறும் பெருமாள்', 'ஜெய்பீம்' மற்றும் 'பொம்மை நாயகி' ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக 'மெல்லிசை' படத்தில் நடிப்பதன் மூலம் இந்தக் கதையின் ஆழத்திற்கும் உணர்வுகளுக்கும் அர்த்தம் சேர்ப்பார்.

இவர்களோடு ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஆழமான உணர்வுகள், நுட்பமான கதை சொல்லல், கவிதைத்துவமான கதை என தலைமுறைகள் கடந்து, அன்பை தேடும் பிரபஞ்சத்தின் கதையாக வெளிவர இருக்கிறது 'மெல்லிசை'.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: திரவ்,
தயாரிப்பு: ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ்,
இசை: ஷங்கர் ரங்கராஜன்,
ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி,
பாடல் வரிகள்: திரவ்.
 
Hashtag FDFS Productions Announces Mellisai — A Poetic Family Drama Exploring the Father-Daughter Bond
“The universe seeks out for love”

Chennai, India – Mellisai, the upcoming feature film from Hashtag FDFS Productions, promises to be a deeply emotional and poetic cinematic experience centered around the timeless bond between a father and daughter. The film is written and directed by Dhirav, who previously gained attention for his work in the award-winning Veppam Kulir Mazhai.

Mellisai beautifully explores human emotions at their deepest, weaving a story across two parallel timelines. Through the arcs of love, ambition, failure, success, and life’s inevitable cycle, the film portrays the emotional nuances of familial relationships with a rare poetic grace. At its heart is a powerful performance by Kishore Kumar, the versatile actor known for standout roles in Vada Chennai and Viduthalai, playing the role of the father.

The female lead is essayed by Subatra Robert, known for her critically acclaimed roles in Pariyerum Perumal, Jai Bhim, and Bommai Nayagi. She brings strength and depth to a character central to the story’s emotional resonance.

The ensemble cast includes several talented performers such as George Mariyan, Harish Uthaman, Jaswant Manikandan, Dhananya, Proactive Prabakar, Kannan Bharati, and more — each contributing to the film’s authenticity and emotional depth.

Mellisai boasts a strong technical team, with Shankar Rangarajan composing the music and Devaraj Pugazhendi handling cinematography. The lyrics are penned by Dhirav, who continues to showcase his creative versatility. The film’s visual and musical language is expected to elevate its narrative to a soulful experience.

Produced by Hashtag FDFS Productions, Mellisai follows the success of their previous venture Veppam Kulir Mazhai, which was widely appreciated and received multiple awards last year.

With its emotional core, rich storytelling, and poetic narrative, Mellisai aims to strike a chord with audiences across generations. The universe seeks out for love — and this film is a testament to that