’ரஸாகர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ரஸாகர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ரஸாகர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ரஸாகர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

ஐதராபாத் நகரத்தின் பின்னணியில் இருக்கும் மாபெரும் வரலாற்று உண்மையை உரக்க சொல்வது தான் ‘ரஸாகர்’ படத்தின் கதை.

 

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த பகுதிகள் அனைத்தும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலில் விடா முயற்சி மற்றும் கடின உழைப்பினால் குட்டி குட்டி சாம்ராஜ்யங்களாக சிதரிக்கிடந்த பகுதிகள் அனைத்தும் ஒன்றினைக்கப்பட்டாலும், ஐதரபாத்தை மட்டும் அதன் ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் இணைய மறுத்ததோடு, தனி ராணுவம், தனி ஆட்சி நடத்தி வந்ததோடு, பாகிஸ்தான் போல் ஐதராபாத்தை துருக்கிஸ்தான் என்ற தனி நாடாக மாற்றுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டனர். அவர்களுடைய முயற்சிகளை முறியடித்து ஐதராபாத்தை எப்படி இந்தியாவுடன் சர்தார் வல்லபாய் பட்டேல் இணைத்தார் என்பது தான் படத்தோட மீதிக்கதை.

 

சர்தார் வல்லபாய் பட்டேல் வேடத்தில் நடித்திருக்கும் தேஜ் சப்ரு, சர்தாரை நேரில் பார்க்காதவர்களுக்கு அவரை நேரில் பார்க்கும் அனுபவத்தை உணர்வுப்பூர்வமாக கொடுத்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவும், அரசியல் அறிவும் வியக்க வைக்கிறது.

 

மிர் உஸ்மான் அலிகான் வேடத்தில் நடித்திருக்கும் மகரந்த் தேஷ் பாண்டே இஸ்லாமிய மன்னர்களின் கொடுங்கோள் ஆட்சியை பிரதிலிக்கும் வகையில் நடிப்பில் மிரட்டியிருக்கார்.

 

பாபி சிம்ஹா படம் முழுவதும் இருப்பார் என்று எதிர்பார்த்தால், சில காட்சிகளில் மட்டும் தலைக்காட்டி விட்டு ஏமாற்றம் அளித்திருக்கார். இருந்தாலும் அவரது வருகையும், நடிப்பும் சபாஷ் சொல்லும் வகையில் இருக்கிறது.

 

வேதிகா, அசிம் ரஸ்வி வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் அர்ஜூன், சந்தாவாவாக நடித்திருக்கும் வேதிகா என படத்தில் நடித்திருக்கும் எல்லோரும் சிறப்பா நடிச்சு ஜொலிக்கிறாங்க.

 

ஒளிப்பதிவாளர் குஷேந்தர் ரமேஷ் ரெட்டியின் உழைப்பு அனைத்துக் காட்சிகளிலும் மிளிர்கிறது. பீம்ஸ் சிசிரோலியோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

 

1947ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், துப்பாக்கிகள், கிராமம் என்று கலை இயக்குநர் திருமலா எம்.திருப்பதியின் அபாரமான பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

சொல்லப்படாத வரலாற்று உண்மையை மிக நேர்த்தியாகவும், எந்தவித ஒளிவு மறைவும் இன்றி சொல்லியிருக்கும் இயக்குநர் யதா சத்யநாராயாணாவின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

இந்துக்கள் மீது அப்போதைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எப்ப்படிப்பட்ட கொடுமைகளை நிகழ்த்தியிருக்காங்க என்பதை காட்சிகளாக விவரித்த விதம் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. ஆனால், அந்த காட்சிகளை திரும்ப திரும்ப காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

 

இதுவரை சொல்லப்படாத வரலாற்று உண்மையை உரக்க சொல்லியிருக்கும் இயக்குநர் யதா சத்யநாராயணாவுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுக்கள்.