’பிரேமலு’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பிரேமலு’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’பிரேமலு’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பிரேமலு’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

நாயகன் நஸ்லென் காலேஜ் படிக்கும் போது ஒரு மாணவியை காதலிக்கிறார். ஆனா அது தோல்வியில முடியுது. அதனால் படிச்சு முடிச்சதும் லண்டன் போகலாம்னு முடிவு பன்றார். அதுவும் தோல்வியில முடியுது. அதனால் நண்பனோட ஐதராபாத் போறார். அங்க ஒரு கல்யாண நிகழ்ச்சியில நாயகி மமீதா பைஜுவை சந்திக்கிறார். அவங்கச் மீதும் நஸ்லெனுக்கு காதல் வருது. அதனால சென்னைக்கு போகும் ஐடியாவை ஓரமாக வைத்துவிட்டு ஐதராபாத்திலேயே தங்கிவிடுகிறார்.

தனது காதலை நாயகியின் தோழியிடம் சொல்ல ,அதுக்கு அவங்க, நாயகி எதிர்பார்க்கும் எந்த தகுதியும் உங்ககிட்டை ல்லை, அதனால் உங்களை அவ ஒத்துக்கமாட்டாங்கன்னு சொல்றங்க. அதுமட்டும் இல்லாம ஆபிஸ் நண்பனான் ஷியாம் மோகனுக்கும், மமீதாவும் உறவில் இருப்பதாகவும் சொல்றாங்க. இதையெல்லாம் கேட்ட பிறகும் நஸ்லென், காதலில் வெற்றி பெற்றாரா? இல்லையான்னு? கலகலன்னு அட்டகாசமா சொல்றது தான் படத்தோட மீதிக்கதை.

நாயகனா நடிச்ச நஸ்லென் காத்யலுக்காக உருகுவதும், பிறகு காதல் தோல்வியால் வாடுவதும், இப்படி பல சோக கீதம்க் பாடும் காட்சிகள் இருந்தாலும், படம் முழுக்க நம்மை சிரிக்க வைப்பது அவருடைய நடிப்புக்கு கிடைச்ச வெற்றி.

நாயகி மமீதா பைஜூ நாயகனின் காதலை டீல் பன்ற காட்சிகளாகட்டும், எதிர்கொள்ளும் காட்சிகளாகட்டும் அத்தனை உணர்ச்சிகளையும் சாதாரணமாக நடிச்சே ரசிகர்களை கவர்ந்திட்றாங்க. இவங்களோட நடிப்பு எந்தவித அலட்டலும் இல்லாம, அதிகமாகவும் இல்லாம, ரசிகர்கள் ரசிக்கிற மாதிரி நடிச்சு, படத்தையே தூக்கி நிறுத்தியிருக்காங்க.

நாயகனின் நண்பனா நடிச்ச சங்கீத் பிரதாப், தனது சரியான டைமிங் வசனத்தாலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுகிறார்.

வில்லத்தனமா நடிச்சாலும் ஷியாம் மோகனின், வில்லத்தனம் வெகுளித்தனமா இருக்குது. இவருடைய காட்சிகள் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்குது.

தோழியாக நடிச்ச அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அலுவலக தோழர்களாக நடிச்ச சமீர் கான், அல்தாப் சலீம் எல்லோரும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கிற மாதிரி நடிச்சிருக்காங்க.

சென்னை, ஐதரபாத், கேரளா, ஆந்திரான்னு தென்னிந்தியா முழுக்க கலர்புல்லா படமாக்கிய ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு உழைப்பு ஒவ்வொரு பிரேமிலையும் தெரியுது.

விஷ்ணு விஜயன் இசையில் பாடல்கள் எல்லாமே ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிற அளவுக்கு இருக்குது.

கிரண் ஜோஷியுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியிருக்கார் இயக்குனர் கிரிஷ் ஏடி.

படத்தை தூக்கி நிறுத்துவதே வசனம் தான். அதற்கு ஏற்றவாறு நடிகர்களின் நடிப்பும் பட்டையை கிளப்யிருப்பது, படத்திற்கு மிகப்பெரிய வெற்ரியை தந்திருக்கிறது.

படத்தை இயக்கிய இயக்குனருக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

காதல் கதையான இந்த படம் இளைஞர்களுக்கு விருந்து, மாணவர்கள் திரும்ப திரும்ப பார்க்க வைக்கிற படம். எல்லா வயதுகாரர்களும் விரும்பி பார்க்கும் படம். 

இப்படி எல்லா சிறப்பும் பெற்று படம்ன்னா அது இது தான்.