’காடுவெட்டி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’காடுவெட்டி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
நாயகன் ஆர்.கே.சுரேஷ் “பெண்ணை தொட்டா வந்து நிப்பேண்டா”ன்னு சொல்லிகிட்டு அடிதடியில் இறங்குகிறார். ஊர் மக்களுக்கு உதவி செய்றார், காதல் தொல்லை கொடுக்கும் இளைஞர்களை வெட்ட சொல்லி பெண்களிடம் அருவா கொடுக்கிறார், அரசியல் தலைவர்களோடு சேர்ந்து போராட்டம், ஆர்பாட்டம் செய்பவர், ஜெயிலுக்கும் போறார்.
இதுக்கு நடுவில தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதிகாரரை காதலிச்சதால ஊர் வழக்கப்படி கொலை செய்யணும், இல்லைனா தனக்கு பிறக்கலைன்னு சொல்லனும்னு பஞ்சாயத்து சொல்றது. பஞ்சாயத்துக்கு கட்டுபட்டு சிவா கொலை செஞ்சாரா? இல்லையா?, பொண்ண தொட்ட வருவேன்னு சொல்ல ஆர்.கே.சுரேஷ் வந்தாரா? இல்லையா?, இப்படி இக்கட்டான கேள்விகளுக்கு ஆக்ஷன், செண்டிமெண்டோட பதில் சொல்றது தான் படத்தோட மீதிக்கதை.
நாயகனா நடிச்ச ஆர்.கே.சுரேஷ், இதில் வில்லன் வேடத்தில் நடிச்சு மிரட்டனதை விட, இதில் நல்லவனா நடிச்சே மிரட்டுறார். அலட்டல் இல்லாம, அதே நேரத்தில் ஆக்ரோஷமான நாயகனாக அமர்க்களமா நடிச்சிருக்கார். கீப்பிட்டப் சுரேஷ்.
தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, பெருமை பேசும் மக்களால் பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமாக நடிச்சிருக்கார். இவரைப்பார்க்கும் போது என்னைப் போன்ற இளைஞர்களுக்கு நடிகர் ரங்காராவ் தான் ஞாபகம் வருது. இவர் இந்த காலத்துக்கேற்ற கேரக்டர் ஆக்டர். இனிமேல் இவரை இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா, சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே.கோபி, விபின் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவு கதைக்கேத்த அளவுக்கு பயணித்திருக்குது.
தெருக்கூத்து கலைஞரின் வாழ்க்கை, சாதி மாறி நடக்கும் நாடக காதல், ஆண்வக் கொலையை மையமா வச்சு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கார் சோலை ஆறுமுகம்.
மொத்தத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லி இயக்கிய இயக்குனருக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுக்கள்.