சேத்துமான்- விமர்சனம்

சேத்துமான்- விமர்சனம்
பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவான படம் ‘சேத்துமான்’.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையே சேத்துமான் என்ற படமாகியிருக்கிறது
வரும் மே 27-ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.
ஒன்லைன் :-
சேத்துமான் என்றால் சேத்தில் விளையாடி திரியும் பன்னி(மான்).. அதை ருசிக்காக கூறு போட வந்த மனிதர்களால் வந்த வினை.
கதைக்களம் :-
நாமக்கல் அருகே உள்ள கிராமம். அதில் கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் பூச்சியப்பன் என்ற ஒரு தாத்தா. (நிஜத்தில் மாணிக்கம்)
தனது பேரன் குமரேசன் (அஸ்வின்) உடன் வாழ்ந்து வருகிறார். மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழந்த சிறுவன் இவன்..
பேரனை நன்றாக படிக்க வைத்து உயர்ந்த அதிகாரியாக உருவாக்கும் லட்சியம் கொண்டவர்
அந்த ஊர் பெரிய பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் செய்கிறார்.
ஒரு நாள் பண்ணையாரும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்பட்டு ரங்கனிடம் வாங்குகின்றனர்.
அதை சுவையாக சமைத்து கொடுக்கிறார் பூச்சியப்பன். அப்போது உருவாகும் பிரச்சினையால் அசம்பாவிதம் நடக்கிறது.
அது என்ன.? ஏன்.? எப்படி.? என்பதே கதை.
கேரக்டர்கள் :
தாத்தா கதாபாத்திரத்தில் மாணிக்கம். இவரை தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மாணிக்கம் என்றும் கூட சொல்லலாம்.
கேமரா ரோலிங்.. கட்.. ஆக்ஷன் ஆகியவை மறந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
பேரனாக அஸ்வின். தாத்தா மீது பாசத்திலும் ஆட்டுக்குட்டி உடன் குறும்புத்தனத்திலும் சூப்பர் டா தம்பி.
கோவக்கார பண்ணையாராக நடித்திருக்கும் ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனல் புகழ் பிரசன்னா பாலசந்திரன் கச்சிதம். மனைவியுடனும் மக்களிடையும் காட்டும் கிராமத்து கெத்தில் அசத்தியிருக்கிறார்.
பூச்சியப்பா, ரங்கன் ஆகிய இருவரும் ஒரே சமூகம் என்றாலும் அவரின் பணிவு இவரின் அடங்காத திமிர் என இரண்டும் பேசப்படும்.
வெள்ளையன் மனைவியாக சாவித்ரி அசத்தல். அவர் புருஷனை வஞ்சிக் கொண்டே பேசும் பேச்சை ரசிச்சிட்டே இருக்கலாம்.. சபாஷ் சாவித்ரி்.
சுப்ரமணியாக சுருளி, ரங்கனாக குமார், ஆசிரியர் ஆகியோரின் நடிப்பை பாராட்டலாம்.
டெக்னீஷியன்கள்:
சமகாலத்திலும் சாதி பாகுபாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நம்மில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் தமிழ்.
அதுபோல இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனாலும் நாட்டில் எந்த வித முன்னேற்றமும் இல்லை..
அரசுப் பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருப்பதால் பள்ளிகள் மூடும் நிலை… கூடை செய்யும் நேர்மையாளன் பூச்சியப்பனிடம் பண்ணையாரின் அதிகார திமிர்… பன்றி கறிக்கு ஆசைப்பட்டாலும் பன்னி மேய்பவனிடம் பாய்ச்சல் என கூறு மேல் கூறு போட்டுள்ளார் இயக்குனர்.
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.. ஆனால் பன்றி கறி வாங்குவதற்கு முன் கூறு போட ஆள் சேர்க்கும் இரவு காட்சி செம சொதப்பல். 10 நிமிடம் ஒரே ஆங்கிளில் தூரமாக வைத்து ஆர்ட்டிஸ்ட் முகம் ; பாவனைகள் கூட தெரியல.. கேமராவை ஆட்டி ஆட்டி எடுத்துள்ளனர்.
மற்றபடி க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி யதார்த்தமானது.
பிந்து மாலனியின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
ஆக.. இந்த ‘சேத்துமான்’ விருந்தை தமிழன் ருசிப்பான்
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
திரைக்கதை – இயக்கம் :தமிழ்
தயாரிப்பாளர் : பா. இரஞ்சித்
கதை – வசனம் : பெருமாள் முருகன்
ஒளிப்பதிவு : பிரதீப் காளிராஜா
இசை : பிந்து மாலினி
படத்தொகுப்பு : C.S. பிரேம் குமார்
ஒலி வடிவமைப்பு : அந்தோணி BJ ரூபன்
சண்டை பயிற்சி : ”ஸ்டன்னர்” சாம்
பாடல்கள் : யுகபாரதி , பெருமாள் முருகன், முத்துவேல்
கலை : ஜெய்குமார்
இணை இயக்குனர் ; சதீஸ் சவுந்தர்
துணை இயக்குனர் : யஷ்வந்த்
ஒலிக்கலவை : பிரமோத் தாமஸ்
நிர்வாகத்தயாரிப்பு : சஞ்சீவ்
கணினி வரைக்கலை : மாதவன்
DI : iGene
விளம்பர வடிவமைப்பு தமோ நாகபூசணம்
மக்கள் தொடர்பு : -குணா
தயாரிப்பு நிறுவனம் : நீலம் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் :
1. மாணிக்கம் (தாத்தா) பூச்சியப்பன்
2. மாஸ்டர். அஸ்வின் (பேரன் )
3. பிரசன்னா [ பண்ணாடி]
4. குமார் (பன்றி வளர்ப்பவர் )
5. சாவித்ரி (வெள்ளையன மனைவி)
6. சுருளி (வெள்ளையன் பங்காளி)
7. அண்ணாமலை (ஆசாரி ]
8. நாகேந்திரன் (வாத்தியார்)