இயக்குனர் என்று பெயர் வாங்கியுள்ள ஷங்கர் இயக்கத்தில் 4 கதாநாயகர்கள்

பெரிய பட்ஜெட் படங்கள் எடுத்து பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் வாங்கியுள்ள ஷங்கர் டைரக்‌ஷனில் கடந்த 2018-ல் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிக்க 2.0 படம் வெளியானது. அதன்பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கினார். கொரோனாவுக்கு முன்பே இதன் படப்பிடிப்பை தொடங்கினர். ஆனால் படப்பிடிப்பில் விபத்து காரணமாக உயிர்பலி ஏற்பட்டதால் நிறுத்தி விட்டனர். ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் கமல்ஹாசன் வேறு புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதனால் படத்தில் இருந்து விலகுவதாக ஷங்கர் பட நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியானது. இதனை பட நிறுவனம் மறுத்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் 4 கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் புதிய கதையை ஷங்கர் எழுதி இருப்பதாகவும், இதில் விஜய்சேதுபதி, கன்னட நடிகர் யஷ் ஆகியோர் நடிக்க முடிவாகிவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. மலையாளம், தெலுங்கில் இருந்து 2 கதாநாயகர்களை தேர்வு செய்யும் பணி நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படத்தை திரையிட திட்டமிட்டு உள்ளார்.