மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.

மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.
மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.

மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.

பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் நிறுவனம் 
‘7 MILES PER SECOND’. 
இந்த நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ முதன் முதலாக பட தயாரிப்பில் இறங்குகிறார். இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார். 

இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். 
‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் இந்த காதல் கதையை ‘மிஸ்’  பண்ணாமல் நடிக்க ஒத்து கொண்டுள்ளார் சித்தார்த். 
இதில், தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். 

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை  இயக்கிய  N.ராஜசேகர் இப் படத்தை இயக்குகிறார். 
இப்படத்தை காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாக உருவாக்கியுள்ளார் டைரக்டர் . 

ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படத்தைக் கலகலப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர். 
ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பின்னணி இசைக்கு பேர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார்.  
‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குனரோடு திரைக்கதை அமைத்துள்ளார். 

இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரும் காதலித்து ரசித்து பார்த்த  ‘பழைய’ சித்தார்த்தைப் பார்க்கலாம்.

பாடல்கள்: மோகன் ராஜன் & ரோகேஷ்
கலை: சிவசங்கர்
சண்டைப் பயிற்சி: தினேஷ் காசி