அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை 'அனுக்கிரகன்

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை 'அனுக்கிரகன்
அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை 'அனுக்கிரகன்
அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை 'அனுக்கிரகன்
அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை 'அனுக்கிரகன்

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை 'அனுக்கிரகன்

 

திரைக்கதையில் புதுமை ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் '

"அனுக்கிரகன்'

 

அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் 'அனுக்கிரகன்'

 

இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் .அவர் மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார். திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் சென்று நடைமுறை அனுபவத்தையும் உற்றுநோக்கி கற்றுக் கொண்டிருக்கிறார். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு திரைக்கலை கற்றவர். சுந்தர்கிரிஷ்

 

இப்படத்தில் கதாநாயகன் நாயகி போன்ற வழக்கமான சூத்திரங்களில் நடிகர்கள் இருக்க மாட்டார்கள். கதைக்கேற்ற நாயகர்களாக இருப்பார்கள் .அப்படித்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் தொடர்கள் வழியே புகழ்பெற்றவர். அஜய் கிருஷ்ணா இன்னொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். 'நாடோடிகள்' படம் முதல் ஒரு திருப்புமுனையான வாய்ப்புக்காக காத்திருப்பவர் இவர். நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணா நடித்துள்ளார். இவர் சில கன்னட ,தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளவர். இன்னொரு முகம் தீபா.தமிழ் தெலுங்கில் நடித்திருக்கும் இளம் நடிகை இவர். 'ரெக்க' படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா :பாடலில் வருபவரும் 'மாரி 'படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார் .மேலும் பல அனுபவமுள்ள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் .

 

இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரிக்கிறார்கள். 

 

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் வினோத் காந்தி. 

இசையமைத்துள்ளவர் ரெஹான். படத்தில் ஆறு பாடல்கள் மூன்று பிரதான பாடல்களும் மூன்று தீம் சொல்லும் பாடல்களும் உண்டு. எடிட்டிங் SK. சதீஷ் குமார் .நடனம் 

ரமேஷ்கமல்.

 

நடுத்தர வயதுள்ள அனைவரையும் தனது பால்ய காலத்துக்குத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது.

விரைவில் திரைகளில் உணர்வுகளைத் தொட வருகிறான் 'அனுக்கிரகன்'.