நாளை முதல் டிரைலர்... அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது "பசும்பொன் தேவர் வரலாறு"
நாளை முதல் டிரைலர்... அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது "பசும்பொன் தேவர் வரலாறு"
நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம்.
அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது.
இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது.