நடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் !
ட்ரெண்ட் லவுட் Trend Loud நிறுவனம் நடிகை அக்ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்த நொடியிலிருந்தே, படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது அடுத்த ஆச்சர்யமாக, Trend Loud நிறுவனம், இப்படத்தில் இந்தியாவின் பெரும்புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது...
இத்தருணம் மிகப்பெரும் பெருமை தரக்கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப் அவர்களுடன் பணிபுரிய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகப்பெரும் பாக்கியம் ஆகும். மேலும் 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அதுவும் எங்கள் படம் மூலம் அவரை தமிழில் நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே. அவர் இப்படத்தில் கர்னாடக சங்கீத வித்தகராக, அக்ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும் நேரெதிரானது. ஆனால் அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போவார். மிகப்பிரபல பாடகி, மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, அனைவரிடமும் மிக எளிமையாக பழகும் அவரது அன்பான இயல்பு, அவரது துறுதுறுப்பு படக்குழுவில் அனைவரிடமும் பெரும் உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது. அவர் முற்றிலும் இயக்குநரின் நடிகை, அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இறுதியாக அவர் நமது உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடன் திரையில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் அக்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும் ஒரு சிறப்பு.