VELS FILM INTERNATIONAL DR. ஐசரி K கணேஷ் வழங்கும், சிலம்பரசன் TR நடிக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும், “வெந்து தணிந்தது காடு” !

VELS FILM INTERNATIONAL DR. ஐசரி K கணேஷ்  வழங்கும், சிலம்பரசன்  TR நடிக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும், “வெந்து தணிந்தது காடு” !
VELS FILM INTERNATIONAL DR. ஐசரி K கணேஷ் வழங்கும், சிலம்பரசன் TR நடிக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும், “வெந்து தணிந்தது காடு” !
VELS FILM INTERNATIONAL DR. ஐசரி K கணேஷ்  வழங்கும், சிலம்பரசன்  TR நடிக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும், “வெந்து தணிந்தது காடு” !
VELS FILM INTERNATIONAL DR. ஐசரி K கணேஷ்  வழங்கும், சிலம்பரசன்  TR நடிக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும், “வெந்து தணிந்தது காடு” !

VELS FILM INTERNATIONAL

DR. ஐசரி K கணேஷ் வழங்கும்,  

சிலம்பரசன் TR நடிக்கும்,

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும், 

“வெந்து தணிந்தது காடு” ! 

 

 

தமிழ் சினிமாவில், திரையில், மேஜிக்கை நிகழ்த்தும் சிலம்பரசன் TR, AR ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி, ஏற்கனவே “விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா” எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றிகளை தந்துள்ளது. இந்த கூட்டணி பற்றி, சிறு செய்தி வெளியானாலும், ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். தற்போது இந்த கூட்டணி, தாங்கள் இணைந்து பணியாற்றவுள்ள படத்தின், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். சிலம்பரசனின் 47 வது படமாக உருவாகும் இப்படம் “வெந்து தணிந்தது காடு” என தலைப்பிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் முற்றிலும் புதிய களத்தில் இப்படத்தை இயக்க, சில்மபரசன் இதுவரை தோன்றியிராத பாத்திரத்தில் நடிக்க மாறுபட்ட புதுமையான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது. 

 

தயாரிப்பாளர் DR. ஐசரி K கணேஷ் படம் குறித்து கூறும்போது.. 

தயாரிப்பாளராக அல்லாமல் ஒரு ரசிகனாகவே மிக உற்சாகமாக இருக்கிறேன். சிலம்பரசன் TR, AR ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி கிடைப்பது, எந்தவொரு தயாரிப்பாளருக்கும். பெரும் வரமாகும். அந்த வகையில் இந்த மூன்று உச்சங்களை வைத்து படம் உருவாக்குவது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நடிகர் சிலம்பரசன் எந்த விதமான கதாபாத்திரத்தையும், எதார்த்தமாக, எளிதில் திறம்பட கையாளும் நடிகராவார். இப்படத்தில் அவரது புதிய லுக்கை ரசிகர்களை பெரிய அளவில் கொண்டாடுவார்கள். “வெந்து தணிந்தது காடு” படம் இது வரை அவர் செய்திராத கதாப்பாத்திரத்தில், அவரது நடிப்பின் மொத்த பரிணாமத்தையும் வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். 

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தின் கதையை பற்றி என்னிடம் கூறும்போது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது, அவரது வழக்கமான கதைகளில் இருந்து இது வேறு விதமான திரைக்கதையை கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. AR ரஹ்மான் இசை எப்போதும் மாயாஜாலத்தை நிகழ்த்தும். அதிலும் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன் கூட்டணியுடன் அவரது இசை இன்னும் சிறப்பாக அமையும். இந்தபடத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. 

 

 

 

“வெந்து தணிந்தது காடு” எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் படமாக, VELS FILM INTERNATIONAL திரைப்பயணத்தில், சிறப்பு மிக்க படைப்பாக இருக்கும்

 

 

கதை பற்றி DR. ஐசரி K கணேஷ் கூறும்போது.. 

இப்போது கதை பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது, 100% தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக இப்படம் இருக்கும். ஜெயமோகன் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். ஒரு சிறந்த ஆக்சன் படமாக, கிராமம் மற்றும் நகர பின்னணியில் கதை நடைபெறும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் இனிய தமிழ் தலைப்புகளுக்கு நான் ரசிகன். அந்த வகையில் “வெந்து தணிந்தது காடு” புகழ்பெற்ற பாரதியார் பாடலின் வரியாகும். அவரின் நூற்றாண்டை கொண்டாடும் இந்த தருணத்தில் எங்கள் படைப்புக்கு அவரது தலைப்பு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. 

 

நேற்று ஆகஸ்ட் 6 அன்று படப்பிடிப்பு, திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டதில் தயாரிப்பு குழு மேலும் மகிழ்ச்சியில் உள்ளது. திருச்செந்தூருக்கும் தயாரிப்பு நிறுனத்தின் பெயரான Vels க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது. 

 

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குழு பற்றி விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்திற்கு சித்தார்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் கலை இயக்கம் செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். உத்தாரா மேனன் உடை வடிவமைப்பை செய்ய, தாமரை பாடல் வரிகள் எழுதுகிறார்.