Win newsTv program Vinnodu Vilaiyaadu
வின் டி.வி. வழங்கும் ‘வின்னோடு விளையாடு’ என்ற விளையாட்டுச் செய்திகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் பாரம்பரிய விளையாட்டை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பி வருகிறது வின்னோடு விளையாடு. இந்த வாரம் சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் இந்த வாரத்தில் ஒளிபரப்பாகிறது. முற்றமில்லா வீடுகள் சூழ்ந்த சென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுகளும் இந்த வாரம் ஒளிபரப்பப்படுகிறது. திண்டுக்கல்லில் நடைபெற்ற மாரத்தான், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கிக் பாக்சிங் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.