"YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்"
YNOT ஸ்டுடியோஸின் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் - ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஆகியோருடன் இணைந்து "YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்" நிறுவனத்தை துவங்குகிறார்.
சென்னை, பிப்ரவரி 20, 2019: YNOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஒன்றினைந்து "YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்" என்ற திரைப்பட மார்க்கெட்டிங் மற்றும் உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவையை துவங்கியுள்ளனர். திரைப்பட வணிகத்தின் ஆக்கப்பூர்வமான, வர்த்தக ரீதியாக வெற்றிகரமான, மற்றும் செல்வாக்குமிக்க திரைப்பட ஜாம்பவான்களின் கூட்டணியாக இந்த முயற்சி திரைப்பட வர்த்தகத்தில் தங்களது முதல் அறிவிப்பை வெளியிடுகிறது.
YNOT ஸ்டூடியோஸ், எஸ். சசிகாந்த், அவர்கள் கூறுகையில் - "YNOTX தரம் மிகுந்த திரைப்படங்களின் விநியோகம் மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த தளம் ஒன்றை உருவாக்கும். சிறந்த படங்களுக்க ஒரு நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்தி அதற்கான வடிவமைப்பை உருவாக்க உதவும்.
தங்கள் படங்களின் வருவாய் திறனை அதிகரிக்க விளம்பரம், விநியோகம் மற்றும் டிஜிட்டல் பகிர்வில் பல்வேறு கூட்டணி நிறுவனங்களுடன் ஒன்றினைந்து, படத்தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை உருவாக்குகிறோம்" என்றார்.
ஷிபாஷிஷ் சர்கார், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி, கூறுகையில் "பல தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் படங்களை தங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு சரியான தளங்களைக் கண்டுபிடிக்க போராடி வருகின்றன. ஏனென்றால் சரியான தளங்களைக் கண்டுபிடிக்க சில வழிகளே உள்ளன, மேலும் பல தயாரிப்பாளர்கள் அந்த சில வழிகளையே பின்பற்றுவதால் பிரச்சனை மேலும் சிக்கலாக்கி பட வெளியீட்டு நேரத்தில் ஒரு தெளிவின்மையை ஏற்படுத்துகிறது.
YNOTX இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கும், பன்மொழி திரைப்படங்களின் விளம்பரம் மற்றும் விநியோகம் இன்னும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி அதை சரியே பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது. " என்றார்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ், ஆர். ரவீந்திரன் கூறுகையில் "சரியான பாதையை சரிவர காட்டாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போதைய திரைப்பட வணிகம் உள்ளது. மேலும் திரைப்படங்களின் விநியோகங்களில் ஒரு சமநிலையின்மை இருப்பதை காணமுடிகிறது. இது போன்ற வணிக ரிதியிலான குழப்பங்களுக்கு சிரியான தீர்வாக நன்கு அனுபவம் வாய்ந்தவர்களும், மிகவும் திறன் வாய்ந்தவர்களும் உள்ள இந்த ஒருங்கிணைந்த குழு அமையும். " என்றார்.
AP இன்டர்நேஷனல், சஞ்சய் ஏ. வாத்வா கூறுகையில் - "பல்வேறு விநியோக தளங்கள் தங்கள் தேவைகளுக்கு பொருந்தும் சரியான படைப்புகளை கண்டுபிடிப்பதற்கான செயல்முறையைப் பெற மெனக்கேட வேண்டிய நிலை இங்கு உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பலரின் எண்ணிக்கையும், மேலும் தங்களுக்கான தேவைகளை அறிவதில் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு வழியை கையாலுவதுமே இதற்கு காரணமாகத் திகழ்கிறது.
YNOTX, படைப்பாளர்கள் வழக்கமாக பின்பற்றி வரும் சிக்கலான வழிகளை உடைதெறிந்து சிறந்த நேர்த்தியான வழியில் தரமான படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்க்கும், வணீக ரிதியாக உதவுவதற்க்கும் வழிவகுக்கிறது
விநியோக வியாபாரத்தில் 12 வருட அனுபவம் கொண்ட திரு. கிஷோர் தலூர், YNOTXல் விநியோக தலைமை பொருப்பில் வகிப்பார்" என்றார்.