நடிகர் ராஜேஷ் காலமானார்

நடிகர் ராஜேஷ் அவர்கள் முதலில் நடிக்க தேர்வான படம் 'அவள் ஒரு தொடர்கதை'. அந்தப் படத்தில் கடவுள் அமைத்து வைத்த மேடை என்கிற பாடலில் விகடகவி பாத்திரத்தில் நடிக்க இருந்தார்.
பிறகு கமலஹாசனை தேர்வு செய்து நடிக்க வைத்த இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அதன் பிறகு அச்சமில்லை அச்சமில்லை தண்ணீர் தண்ணீர் போன்ற படங்களில் அவரை நடிக்க வைத்தார்.
ஆனால் அவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் கன்னி பருவத்திலே
இன்று (29.05.2025) காலை 8 மணியளவில் நடிகர் ராஜேஷ்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமார் 8:15 மணியளவில் அவர் காலமானார். வயது 75. அவர் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அவர் மகள் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும் அடக்கம் செய்யப்படும். சென்னை ராமாவரத்தில் வீடு உள்ளது.