5 கதாநாயகிகள் கொண்ட படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்

5 கதாநாயகிகள் கொண்ட படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்

தமிழில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா 'சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன் 'ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடிக்கவும் செய்திருந்தார்.இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்திற்கு 'காலன் ரிட்டர்ன்ஸ்' என்று பெயரிட்டு இருக்கிறார்.இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதில் ஒருவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'அநேகன்' படத்தில் நாயகியாக நடித்த அமைரா தஸ்தூர் ஆவார்.இவர் இந்த படத்தை பற்றி கூறும்போது,"இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடித்திருக்கிறோம்.ஆனால் எங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை.அதனால் படம் மிக நன்றாக உருவாகிக் கொண்டிருக்கிறது"என்று தெரிவித்துள்ளார்.