இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாசின் தங்கை கதாநாயகி ஆகிறார்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாசின் தங்கை கதாநாயகி ஆகிறார்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் அவருடைய சகோதரராக நடித்தவர் ஆனந்த்.இவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் அந்த படத்தை டைரக்டும் செய்கிறார்.

இவருக்கு ஜோடியாக புதுமுகம் பவானி அறிமுகம் ஆகிறார்.இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி பிரகாசின் தங்கை ஆவார்.

ஆனந்த மற்றும் பவானியுடன், குமரவேல், வைசாலி ,ஆர் ஜே ஆனந்தி ,ஆகிய 3 பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.இது ஒரு ஜாலியான பொழுது போக்கு படமாக தயாராகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை பாத்திமாவின் மகன் ஹாசிப் இந்த படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.