ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு "பூமி" டைட்டில்.!

ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு "பூமி" டைட்டில்.!

ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த 'கோமாளி' படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு 'பூமி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவி நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட், போகன் படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். அடங்கமாறு படத்தை தயாரித்த ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார் தான் இப்படத்தையும் தயாரிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.