பிகில் ட்ரெய்லர் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

பிகில் ட்ரெய்லர் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இன்று மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில்(Big trailor of day) என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் ட்ரெய்லரின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 2 நிமிடம் 30 விநாடிகள் நீளம் கொண்டதாக ட்ரெய்லர் இருக்கும் என்று கூறப்படுகிறது.