சந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா?
சென்னை: சந்தானம் கடைசியாக ஏ1 படத்தில் நடித்திருந்தார், அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயகத்தில் 'டிக்கிலோனா' என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் யோகி இதற்கு முன் நினைத்தது யாரோ மற்றும் பலூன் படங்களை இயக்கியுள்ளார். சந்தானம் முழு நேர ஹீரோவாக மாறியதில் இருந்து கதைகளை கவனமாய் தான் தேர்வு செய்து வருகிறார், ஹீரோவாக நடித்தாலும் தனது மார்கெட்டான காமெடியை விட்டு விலகி போகாமல் அதனுள் இருந்து கொண்டு ஹீரோயிசம் செய்து வருகிறார் . சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே மிக பெரிய வெற்றி படங்கள்
நெஞ்சம் மறப்பதில்லை மன்னவன் வந்தானடி படம் நீண்ட நாட்களாக எடுக்க பட்டு வருகிறது மறுமுனையில் செல்வராகவனின் மற்றொரு படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யபடாமல் கிடப்பில் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன் இதற்கான சரியான விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை.
இந்த மாதிரியாக முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் எப்படியாவது மக்களை கவர்ந்து விடும் ,படத்தில் கதையே இல்லையென்றாலும் கூட படத்தில் உள்ள நகைச்சுவைக்காக படம் வெற்றி பெற்று விடும் .இப்படி பல நடிகர்களை வைத்து பல்வேறு காமெடி திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்க பட்டு இருக்கிறது. இந்த படமும் நகைச்சுவை படமாக மிக பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .